இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறை முன்னிட்டு திருகோணமலை மொரவெவ சிங்கள வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் ஒன்று கூடல் மண்டபம் இன்று (11) மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இலங்கை விமானப்படை வீரர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டிடத்தினை, விமானப் படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
"பிருணு குசக்,பிருனு ஹிசக்"அமைப்பின் ஊடாக 53 நாட்களில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டதாகவும், வடக்கு மாகாணத்தில் 73 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் விமானப்படை தளபதி இதன் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மொரவெவ விமானப்படை தளத்தின் பொறுப்பதிகாரி ஹேமந்த பால சூரிய பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருமலை பாடசாலையில் விமானப்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடம் திறந்துவைப்பு. இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறை முன்னிட்டு திருகோணமலை மொரவெவ சிங்கள வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் ஒன்று கூடல் மண்டபம் இன்று (11) மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.இலங்கை விமானப்படை வீரர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டிடத்தினை, விமானப் படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது."பிருணு குசக்,பிருனு ஹிசக்"அமைப்பின் ஊடாக 53 நாட்களில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டதாகவும், வடக்கு மாகாணத்தில் 73 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் விமானப்படை தளபதி இதன் போது தெரிவித்தார்.இந்நிகழ்வில், மொரவெவ விமானப்படை தளத்தின் பொறுப்பதிகாரி ஹேமந்த பால சூரிய பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.