• Feb 20 2025

தம்பலகாமம் பகுதியில் சிறு ஆடை தொழிற்சாலை திறந்து வைப்பு

Chithra / Feb 17th 2025, 2:45 pm
image

 


திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் கல்மெடியாவ வடக்கு சுவாமி மலை கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில்  சிறு ஆடைத் தொழிற்சாலை ஒன்று இன்று (17) திறந்து வைக்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த ஆடைத் தொழிற் சாலையை திறந்து வைத்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்த வாணிபத் துறை  அமைச்சினால் வழங்கப்பட்ட தையல்  இயந்திரங்கள் சிறு தொழில் முயற்சியாளரான டுபாய் பெசன் தொழில் முயற்சியாளருக்கு வழங்கப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

இதன் மூலம் தைக்கப்பட்ட ஆடை வகைகள் உட்பட பல  தையல் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. 

இதன் மூலமாக பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தம்பலகாமம் பிரதேச செயலகம் ஊடாக சிறு கைத் தொழில் அபிவிருத்தி அதிகார சபை இதற்கான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. பயிற்றப்பட்ட போதனாசிரியர் மூலமாக உற்பத்தி நடவடிக்கைகள் இடம் பெறவுள்ளன. 

குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட கைத்தொழில் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்  என பலரும் கலந்து கொண்டனர்.


தம்பலகாமம் பகுதியில் சிறு ஆடை தொழிற்சாலை திறந்து வைப்பு  திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் கல்மெடியாவ வடக்கு சுவாமி மலை கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில்  சிறு ஆடைத் தொழிற்சாலை ஒன்று இன்று (17) திறந்து வைக்கப்பட்டது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த ஆடைத் தொழிற் சாலையை திறந்து வைத்தார்.கைத்தொழில் மற்றும் வர்த்த வாணிபத் துறை  அமைச்சினால் வழங்கப்பட்ட தையல்  இயந்திரங்கள் சிறு தொழில் முயற்சியாளரான டுபாய் பெசன் தொழில் முயற்சியாளருக்கு வழங்கப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் தைக்கப்பட்ட ஆடை வகைகள் உட்பட பல  தையல் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. இதன் மூலமாக பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தம்பலகாமம் பிரதேச செயலகம் ஊடாக சிறு கைத் தொழில் அபிவிருத்தி அதிகார சபை இதற்கான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. பயிற்றப்பட்ட போதனாசிரியர் மூலமாக உற்பத்தி நடவடிக்கைகள் இடம் பெறவுள்ளன. குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட கைத்தொழில் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்  என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement