• Feb 20 2025

Tharmini / Feb 17th 2025, 2:45 pm
image

யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் Agri Tech 2025 எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ளது.

அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு கிளிநொச்சி  விவசாய பீடத்தில் நடைபெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் விவசாய பீட பீடாதிபதி தலைமையில் பேராசிரியர்கள் ,விரிவுரையாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. 

விவசாய பீட பீடாதிபதி கே.பகீரதன் கருத்து தெரிவிக்கையில் எதிர் வெள்ளிக்கிழமை காலை 8.30மணி தொடக்கம் மாலை 6.00மணிவரை கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள விவசாய பீடத்தில் நடைபெறவுள்ளது. 

விவசாய பீட ஆராய்ச்சி மாணவர்கள், விவசாய பீடம் சார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ,இந்த பகுதி விவசாயிகள், விவசாயம் சார் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற இளைஞர்யுவதிகள், விவசாயம் சார்ந்த நிறுவனங்களை ஒன்றிணைத்து வருடம் தோறும் நடாத்துகின்றோம்.

2024ம் ஆண்டு விவசாயிகள் மற்றும் விவசாய துறைசார்ந்தோரால் முன்வைக்கப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண்பதும் தற்போது உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண்பதும் நோக்கமாகும் உங்கள் அனைவரினதும் வருகையையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம். 

ஏனைய வருடங்ளைப்போல் அல்லாது இந்த வருடம் இந்த பகுதிகளுக்கு பொருத்தமான தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்து கண்காட்சிக்கு வைக்கவுள்ளோம் எனவே அனைவரும் கலந்து கொண்டு Agri tech 2025 வெற்றிகரமாக நாடாத்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் Agri Tech 2025 யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் Agri Tech 2025 எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ளது. அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு கிளிநொச்சி  விவசாய பீடத்தில் நடைபெற்றது.குறித்த ஊடக சந்திப்பில் விவசாய பீட பீடாதிபதி தலைமையில் பேராசிரியர்கள் ,விரிவுரையாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. விவசாய பீட பீடாதிபதி கே.பகீரதன் கருத்து தெரிவிக்கையில் எதிர் வெள்ளிக்கிழமை காலை 8.30மணி தொடக்கம் மாலை 6.00மணிவரை கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள விவசாய பீடத்தில் நடைபெறவுள்ளது. விவசாய பீட ஆராய்ச்சி மாணவர்கள், விவசாய பீடம் சார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ,இந்த பகுதி விவசாயிகள், விவசாயம் சார் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற இளைஞர்யுவதிகள், விவசாயம் சார்ந்த நிறுவனங்களை ஒன்றிணைத்து வருடம் தோறும் நடாத்துகின்றோம்.2024ம் ஆண்டு விவசாயிகள் மற்றும் விவசாய துறைசார்ந்தோரால் முன்வைக்கப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண்பதும் தற்போது உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண்பதும் நோக்கமாகும் உங்கள் அனைவரினதும் வருகையையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம். ஏனைய வருடங்ளைப்போல் அல்லாது இந்த வருடம் இந்த பகுதிகளுக்கு பொருத்தமான தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்து கண்காட்சிக்கு வைக்கவுள்ளோம் எனவே அனைவரும் கலந்து கொண்டு Agri tech 2025 வெற்றிகரமாக நாடாத்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement