• Nov 27 2024

கிளப் வசந்த கொலையில் சம்பவம்; மேலும் இருவர் கைது

Chithra / Jul 24th 2024, 9:01 am
image


கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் நயனா வசுலா ஆகியோரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் போது, ​​குற்றத்திற்கு ஆதரவாக செயற்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் நேற்று அதுருகிரி மற்றும் பத்தரமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு அத்துருகிரி பொலிஸாரிடம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குறித்த காலப்பகுதியில் சந்தேக நபர் வட்ஸ்அப் ஊடாக வெளி நாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது.

அத்துடன் கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 வயது மற்றும் 36 வயதுடைய வெலிபன்ன மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளப் வசந்த கொலையில் சம்பவம்; மேலும் இருவர் கைது கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் நயனா வசுலா ஆகியோரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் போது, ​​குற்றத்திற்கு ஆதரவாக செயற்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் நேற்று அதுருகிரி மற்றும் பத்தரமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு அத்துருகிரி பொலிஸாரிடம் ஆஜர்படுத்தப்பட்டனர்.குறித்த காலப்பகுதியில் சந்தேக நபர் வட்ஸ்அப் ஊடாக வெளி நாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது.அத்துடன் கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 வயது மற்றும் 36 வயதுடைய வெலிபன்ன மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement