• Aug 05 2025

அடுத்தடுத்து ரஷ்யாவை தாக்கும் சம்பவங்கள்; 600 ஆண்டுகளுக்குப் பின் வெடித்துச் சிதறிய எரிமலை!

shanuja / Aug 4th 2025, 10:11 am
image

ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முதலாக எரிமலை வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளர். 


ரஷ்யாவின் கம்சற்காவில் கிராஷெனின்னிகோவ் என்ற எரிமலையில் கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன.


கிராஷெனின்னிகோவ் என்ற எரிமலையானது  வெடித்துச் சிதற ஆரம்பித்த ஒரே இரவில், கிட்டத்தட்ட 6 கிலோ மீற்றர் உயரத்துக்கு அந்தப் பகுதி முழுவதும் சாம்பல் புகை சூழ்ந்தது.


கிராஷெனின்னிகோவ்  எரிமலை வெடித்துச் சிதறியதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரஷ்யாவில்  கம்சற்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக இந்த எரிமலை வெடித்துச் சிதறியிருக்கலாம் என்றும் மேலும் பல எரிமலைகள் வெடித்துச் சிதற வாய்ப்பு உள்ளது என்றும் காலநிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 


ரஷ்யாவை உலுக்கிய நிலநடுக்கத்தை அடுத்து 600 ஆண்டுகளுக்குப் பின்னர் குறித்த எரிமலை வெடித்துச் சிதறியுள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என்றவாறாக தொடர் தாக்கங்களை ரஷ்ய மக்கள் எதிர்கொண்டு வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து ரஷ்யாவை தாக்கும் சம்பவங்கள்; 600 ஆண்டுகளுக்குப் பின் வெடித்துச் சிதறிய எரிமலை ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முதலாக எரிமலை வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளர். ரஷ்யாவின் கம்சற்காவில் கிராஷெனின்னிகோவ் என்ற எரிமலையில் கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன.கிராஷெனின்னிகோவ் என்ற எரிமலையானது  வெடித்துச் சிதற ஆரம்பித்த ஒரே இரவில், கிட்டத்தட்ட 6 கிலோ மீற்றர் உயரத்துக்கு அந்தப் பகுதி முழுவதும் சாம்பல் புகை சூழ்ந்தது.கிராஷெனின்னிகோவ்  எரிமலை வெடித்துச் சிதறியதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷ்யாவில்  கம்சற்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக இந்த எரிமலை வெடித்துச் சிதறியிருக்கலாம் என்றும் மேலும் பல எரிமலைகள் வெடித்துச் சிதற வாய்ப்பு உள்ளது என்றும் காலநிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவை உலுக்கிய நிலநடுக்கத்தை அடுத்து 600 ஆண்டுகளுக்குப் பின்னர் குறித்த எரிமலை வெடித்துச் சிதறியுள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என்றவாறாக தொடர் தாக்கங்களை ரஷ்ய மக்கள் எதிர்கொண்டு வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement