நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பை அண்டிய புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன் நுவரெலியா, கண்டி, புத்தளம், காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.
பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை; 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை கொழும்பை அண்டிய புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டது.நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.அத்துடன் நுவரெலியா, கண்டி, புத்தளம், காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.