மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மாவட்டத்தில் தாழ் நிலப்பகுதிகள் மழை வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு 56 குடும்பங்கள் இடைத்தாங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதனால் மாவட்டத்திலுள்ள கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிரானுக்கும் புலிபாஞ்சகல் பகுதியின் வீதியின் மேலாக வெள்ள நீர்பாய்ந்து செல்கின்றது.
இதனால் கிண்ணயடி தொடக்கம் பிரம்படித்தீவு வரையிலான பிரதேசத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாகவும், இதனால் படகு சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது
வாகரை பிரதேச செயலப் பிரிவில் கல்லரிப்பு பிரதேசத்தில் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்ததையடுத்து அப்பகுதியில் உள்ள பொது கட்டித்தில் 17 குடும்பங்களும் கதிரவெளி ஜூனியர் பாடசாலையில் 30 குடும்பங்களும் கல்லரிப்பு முன்பள்ளியில் 9 குடும்பங்கள் உட்பட 56 குடும்பங்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வெருகல் கிராம சேவகர் பிரிவில் உள்ள வட்டவான், சேனையூர் மற்றும் மாவடிச்சேனை ஆகிய கிராமங்களில் மக்களின் குடியிருப்புகளில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.
இதன் காரணமாக இன்று (02) வரை சுமார் 229 குடும்பங்களை சேர்ந்த 642 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இவர்களுள் சுமார் 120 குடும்பங்களை சேர்ந்த 341 பேர் வெருகலம்பதி இந்துமகா வித்தியாலயத்தின் இடைத் தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெருகல் பிரதேச செயலாரர் எம்.ஏ. அனஸ் திட்டமிடலுக்கு அமைய கிராம சேவகர்களாலும், பிரதேச செயலக அலுவலர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அத்தியவசிய தேவைகள் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் வெள்ள நீர் மட்டம் தொடர்ந்தும் கணிசமான அளவு உயர்வடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பொலன்னறுவை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு காரணமாக கந்தளாய் சூரியபுர வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்கலில் இருந்து, வெளியேற்றப்படும் நீர் காரணமாக நீர்மட்டம் அதிகரித்து, கந்தளாய் பகுதியில் உள்ள சூரியபுர, சேருநுவர மற்றும் சிறிமங்கலபுர பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால், சேருவில-கண்டி பிரதான வீதியில் சுமார் இருபது கிலோமீட்டர் தூரம் வரை வீதி இருபக்கமும் காட்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகாவலி கங்கை வனவிலங்கு பாதுகாப்பு எல்லைப் பகுதியில் கால்நடைகளுக்கு போதுமான மேச்சல் தரை இன்மையால், கால்நடைகள் இறந்துள்ளதாகவும் பண்ணை தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து வெள்ளம் வருவதனால், விவசாய கிராமங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்
தொடரும் சீரற்ற காலநிலை: வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள் விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மாவட்டத்தில் தாழ் நிலப்பகுதிகள் மழை வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு 56 குடும்பங்கள் இடைத்தாங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் வெளியிட்டுள்ளது.தொடர்ந்து மழை பெய்து வருவதனால் மாவட்டத்திலுள்ள கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிரானுக்கும் புலிபாஞ்சகல் பகுதியின் வீதியின் மேலாக வெள்ள நீர்பாய்ந்து செல்கின்றது.இதனால் கிண்ணயடி தொடக்கம் பிரம்படித்தீவு வரையிலான பிரதேசத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாகவும், இதனால் படகு சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதுவாகரை பிரதேச செயலப் பிரிவில் கல்லரிப்பு பிரதேசத்தில் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்ததையடுத்து அப்பகுதியில் உள்ள பொது கட்டித்தில் 17 குடும்பங்களும் கதிரவெளி ஜூனியர் பாடசாலையில் 30 குடும்பங்களும் கல்லரிப்பு முன்பள்ளியில் 9 குடும்பங்கள் உட்பட 56 குடும்பங்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வெருகல் கிராம சேவகர் பிரிவில் உள்ள வட்டவான், சேனையூர் மற்றும் மாவடிச்சேனை ஆகிய கிராமங்களில் மக்களின் குடியிருப்புகளில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. இதன் காரணமாக இன்று (02) வரை சுமார் 229 குடும்பங்களை சேர்ந்த 642 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுள் சுமார் 120 குடும்பங்களை சேர்ந்த 341 பேர் வெருகலம்பதி இந்துமகா வித்தியாலயத்தின் இடைத் தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெருகல் பிரதேச செயலாரர் எம்.ஏ. அனஸ் திட்டமிடலுக்கு அமைய கிராம சேவகர்களாலும், பிரதேச செயலக அலுவலர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அத்தியவசிய தேவைகள் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வெள்ள நீர் மட்டம் தொடர்ந்தும் கணிசமான அளவு உயர்வடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மேலும் பொலன்னறுவை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு காரணமாக கந்தளாய் சூரியபுர வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்கலில் இருந்து, வெளியேற்றப்படும் நீர் காரணமாக நீர்மட்டம் அதிகரித்து, கந்தளாய் பகுதியில் உள்ள சூரியபுர, சேருநுவர மற்றும் சிறிமங்கலபுர பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.இதனால், சேருவில-கண்டி பிரதான வீதியில் சுமார் இருபது கிலோமீட்டர் தூரம் வரை வீதி இருபக்கமும் காட்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், மகாவலி கங்கை வனவிலங்கு பாதுகாப்பு எல்லைப் பகுதியில் கால்நடைகளுக்கு போதுமான மேச்சல் தரை இன்மையால், கால்நடைகள் இறந்துள்ளதாகவும் பண்ணை தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து வெள்ளம் வருவதனால், விவசாய கிராமங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்