• Dec 28 2024

திருகோணமலையில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு

Tharmini / Dec 25th 2024, 1:17 pm
image

திருகோணமலை மாவட்ட, நகர சபை பகுதிக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை நகர் பிரதான வீதியில் குறித்த மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பால் நடுவீதியில் பல மாடுகள் நிற்பதால் போக்குவரத்து தடை செய்யப்படுவதுடன் விபத்து சம்பவங்களும் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

குறித்த நகர் பகுதியில் வீடுகளில் சேரும் குப்பை கழிவுகளை வீட்டின் முன் நுழைவாயிலின் வெளிப்பகுதியில் வைப்பதால் அதனை இக்கட்டாக்காளி மாடுகள் அங்கும் இங்கும் இழுத்து வீதியை நாசமாக்குவதாகவும் தெரிவிக்கின்றனர். 

எனவே குறித்த கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



திருகோணமலையில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு திருகோணமலை மாவட்ட, நகர சபை பகுதிக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.திருகோணமலை நகர் பிரதான வீதியில் குறித்த மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பால் நடுவீதியில் பல மாடுகள் நிற்பதால் போக்குவரத்து தடை செய்யப்படுவதுடன் விபத்து சம்பவங்களும் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நகர் பகுதியில் வீடுகளில் சேரும் குப்பை கழிவுகளை வீட்டின் முன் நுழைவாயிலின் வெளிப்பகுதியில் வைப்பதால் அதனை இக்கட்டாக்காளி மாடுகள் அங்கும் இங்கும் இழுத்து வீதியை நாசமாக்குவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே குறித்த கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement