தேயிலை பயிர்ச்செய்கைக்கான உர மானியமாக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்த 2,000 ரூபாய் தொகையை 4,000 ரூபாவாக அதிகரிக்க விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் பருவத்திலிருந்து இந்த உர மானியம் வழங்கப்படவுள்ளதுடன், தேயிலை உரத்தின் விலையை 2,000 ரூபாவினால் அரச உர நிறுவனம் குறைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மானியத்திற்காக 02 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதுடன், அந்த தொகையை இலங்கை தேயிலை சபையின் நிதியின் ஊடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேயிலை பயிர்ச்செய்கைக்கான உர மானியம் அதிகரிப்பு தேயிலை பயிர்ச்செய்கைக்கான உர மானியமாக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்த 2,000 ரூபாய் தொகையை 4,000 ரூபாவாக அதிகரிக்க விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.எதிர்வரும் பருவத்திலிருந்து இந்த உர மானியம் வழங்கப்படவுள்ளதுடன், தேயிலை உரத்தின் விலையை 2,000 ரூபாவினால் அரச உர நிறுவனம் குறைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த மானியத்திற்காக 02 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதுடன், அந்த தொகையை இலங்கை தேயிலை சபையின் நிதியின் ஊடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.