• May 09 2024

இராணுவத்தினருக்கான உணவுக் கொடுப்பனவுத் தொகை அதிகரிப்பு! samugammedia

Chithra / Jun 21st 2023, 6:23 am
image

Advertisement

இராணுவத்தளபதி விகும் லியனகேயின் வேண்டுகோளின் பேரில் இராணுவத்தினருக்கான உணவுக் கொடுப்பனவுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை முப்படைகளின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார்.

2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையினால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தத்தை குறைக்கும் வகையில், இராணுவம் அனைத்து இராணுவ உறுப்பினர்களின் உணவுக்கான கொடுப்பனவுத் தொகையை தோராயமாக 10,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அனைத்து இராணுவ வீரர்களின் மாதாந்த உணவுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மே மாதம் முதல் அனைத்து இராணுவ வீரர்களின் சம்பளத்துடன் அது சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

நிர்வாகக் கடமைகள் காரணமாக இதுவரை காலதாமதமாகி வந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான நிலுவைத் தொகையை தமது சம்பளத்துடன் சேர்க்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை இராணுவம் (20) தெரிவித்துள்ளது. 


இராணுவத்தினருக்கான உணவுக் கொடுப்பனவுத் தொகை அதிகரிப்பு samugammedia இராணுவத்தளபதி விகும் லியனகேயின் வேண்டுகோளின் பேரில் இராணுவத்தினருக்கான உணவுக் கொடுப்பனவுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியை முப்படைகளின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார்.2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையினால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தத்தை குறைக்கும் வகையில், இராணுவம் அனைத்து இராணுவ உறுப்பினர்களின் உணவுக்கான கொடுப்பனவுத் தொகையை தோராயமாக 10,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.அதன்படி, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அனைத்து இராணுவ வீரர்களின் மாதாந்த உணவுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மே மாதம் முதல் அனைத்து இராணுவ வீரர்களின் சம்பளத்துடன் அது சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.நிர்வாகக் கடமைகள் காரணமாக இதுவரை காலதாமதமாகி வந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான நிலுவைத் தொகையை தமது சம்பளத்துடன் சேர்க்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை இராணுவம் (20) தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement