• Nov 22 2024

காடுகளுக்கு தீ மூட்டும் சம்பவங்கள் அதிகரிப்பு - மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

Chithra / Jul 25th 2024, 12:45 pm
image

 

தற்போது வறட்சியான காலநிலை நிலவுவதால் ஆங்காங்கே காடுகளுக்கு தீ மூட்டும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே காடுகளுக்கு தீ மூட்டுவது சட்டப்படி பாரிய குற்றமாகும். 

எனவே, தீ மூட்டும் நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 055 2288222 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தகவல் வழங்கும் நபர்கள் தொடர்பில் இரகசியம் பாதுகாக்கப்படுமெனவும் அவர்களுக்கான பணப்பரிசில்களும் வழங்கப்படுமெனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

காடுகளுக்கு தீ மூட்டும் சம்பவங்கள் அதிகரிப்பு - மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்  தற்போது வறட்சியான காலநிலை நிலவுவதால் ஆங்காங்கே காடுகளுக்கு தீ மூட்டும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.எனவே காடுகளுக்கு தீ மூட்டுவது சட்டப்படி பாரிய குற்றமாகும். எனவே, தீ மூட்டும் நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 055 2288222 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.தகவல் வழங்கும் நபர்கள் தொடர்பில் இரகசியம் பாதுகாக்கப்படுமெனவும் அவர்களுக்கான பணப்பரிசில்களும் வழங்கப்படுமெனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement