• Nov 27 2024

விவசாய செய்கைக்கான உற்பத்திச் செலவீனங்கள் அதிகரிப்பு...! மானியங்களை வழங்குமாறு சபா.குகதாஸ் கோரிக்கை...!

Sharmi / Jun 26th 2024, 3:59 pm
image

விவசாய உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கான மானியங்களை ரணில் அரசாங்கம் வழங்க வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் உள்ள விவசாயிகள் உற்பத்திச் செலவீனங்களின் அதிகரிப்பு காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மண்ணெண்னை , மின் மோட்டர்களுக்கான மின்சாரம் , உரவகை மற்றும் இரசாயன நாசிகள் போன்றவற்றுக்கான மானியங்களை வழங்குவதன் ஊடாக உற்பத்திச் செலவை குறைத்து நுகர்வோருக்கு கொள்வனவு விலையை அபரிமிதமாக அதிகரிக்க விடாது தடுக்கலாம்.

நாட்டில் விவசாய உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் உற்பத்தியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

அத்துடன் உற்பத்தி விளைவின் தொகை வீழ்ச்சியடைவதால் நுகர்வோர் அதிகமான விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை தொடர்கிறது.

ஆகவே, ஜனாதிபதி ரணில்விக்கிரசிங்க அரசாங்கம் உடனடியாக விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கு கமக்காரர்களுக்கான மானியங்களை வழங்க அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

விவசாய செய்கைக்கான உற்பத்திச் செலவீனங்கள் அதிகரிப்பு. மானியங்களை வழங்குமாறு சபா.குகதாஸ் கோரிக்கை. விவசாய உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கான மானியங்களை ரணில் அரசாங்கம் வழங்க வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டின் உள்ள விவசாயிகள் உற்பத்திச் செலவீனங்களின் அதிகரிப்பு காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.மண்ணெண்னை , மின் மோட்டர்களுக்கான மின்சாரம் , உரவகை மற்றும் இரசாயன நாசிகள் போன்றவற்றுக்கான மானியங்களை வழங்குவதன் ஊடாக உற்பத்திச் செலவை குறைத்து நுகர்வோருக்கு கொள்வனவு விலையை அபரிமிதமாக அதிகரிக்க விடாது தடுக்கலாம்.நாட்டில் விவசாய உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் உற்பத்தியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்து வருகின்றது. அத்துடன் உற்பத்தி விளைவின் தொகை வீழ்ச்சியடைவதால் நுகர்வோர் அதிகமான விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை தொடர்கிறது.ஆகவே, ஜனாதிபதி ரணில்விக்கிரசிங்க அரசாங்கம் உடனடியாக விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கு கமக்காரர்களுக்கான மானியங்களை வழங்க அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement