• Feb 13 2025

கனடிய தேசிய கொடிகள் விற்பனையில் அதிகரிப்பு!

Tharmini / Feb 13th 2025, 9:58 am
image

கனடாவின் தேசியக்கொடி விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய நாட்களாக உலக அரங்கில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் காரணமாக இவ்வாறு கனடாவின் தேசியக்கொடிகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்கரியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஒன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, கனடா மீது பிரயோகித்து வரும் அழுத்தங்கள் காரணமாக இந்த தேசப்பற்று உந்துதல் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், கனடாவை அமெரிக்க மாநிலமாக இணைத்துக்கொள்ள போவதாக எச்சரித்துள்ளார்.

மேலும் பல்வேறு வரி விதிப்புகளை அறிவிக்கப்போவதாக அடிக்கடி மிரட்டி வருகிறார்.

இவ்வாறான ஓர் பின்னணிகளில் தேசிய கொடி விற்பனையில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது 25 வீதமான அமெரிக்கா அதிகரித்துள்ளது.

கனடிய தேசிய கொடிகள் விற்பனையில் அதிகரிப்பு கனடாவின் தேசியக்கொடி விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அண்மைய நாட்களாக உலக அரங்கில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் காரணமாக இவ்வாறு கனடாவின் தேசியக்கொடிகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கல்கரியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஒன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.அமெரிக்கா, கனடா மீது பிரயோகித்து வரும் அழுத்தங்கள் காரணமாக இந்த தேசப்பற்று உந்துதல் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், கனடாவை அமெரிக்க மாநிலமாக இணைத்துக்கொள்ள போவதாக எச்சரித்துள்ளார்.மேலும் பல்வேறு வரி விதிப்புகளை அறிவிக்கப்போவதாக அடிக்கடி மிரட்டி வருகிறார்.இவ்வாறான ஓர் பின்னணிகளில் தேசிய கொடி விற்பனையில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது 25 வீதமான அமெரிக்கா அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement