• Nov 26 2024

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு...!

Sharmi / May 16th 2024, 11:36 am
image

கடந்த சித்திரை மாதத்தில் 148,867 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இது கடந்த 2023 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 41.1% அதிகமாகும்  எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இவ்வருடத்தின் முதல் 4 மாதங்களில் 784,651 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில்,   இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வருகை முடிந்து திரும்பும் போது விமான நிலையத்தில் இலங்கை தேயிலையை நினைவுப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர முன்மொழிந்துள்ளார்.

அதன்படி, சிலோன் டீயின் பெயரை உலகில் பிரபலப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளுக்கும் இலங்கை தேயிலை பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளது.

தேயிலை கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த யோசனையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு. கடந்த சித்திரை மாதத்தில் 148,867 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.இது கடந்த 2023 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 41.1% அதிகமாகும்  எனவும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை இவ்வருடத்தின் முதல் 4 மாதங்களில் 784,651 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இவ்வாறானதொரு நிலையில்,   இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வருகை முடிந்து திரும்பும் போது விமான நிலையத்தில் இலங்கை தேயிலையை நினைவுப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர முன்மொழிந்துள்ளார்.அதன்படி, சிலோன் டீயின் பெயரை உலகில் பிரபலப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளுக்கும் இலங்கை தேயிலை பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளது.தேயிலை கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த யோசனையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement