• May 04 2024

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் - வெளியான சுற்றறிக்கை

Chithra / Mar 31st 2024, 5:33 pm
image

Advertisement

 

பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பிரதேச செயலாளர் ஒருவருக்கு 15,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உதவி பிரதேச செயலாளர், உதவி இயக்குனர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கு தலா ரூ.10,000 மாதாந்த உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த ஊக்கத்தொகை மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு தேவையான ஒதுக்கீடு, இந்த வருடத்தில் பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டின் நிர்வாகச் செலவுகளில் இருந்து செய்யப்பட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் - வெளியான சுற்றறிக்கை  பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி பிரதேச செயலாளர் ஒருவருக்கு 15,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உதவி பிரதேச செயலாளர், உதவி இயக்குனர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கு தலா ரூ.10,000 மாதாந்த உதவித்தொகை வழங்கப்படும்.இந்த ஊக்கத்தொகை மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு தேவையான ஒதுக்கீடு, இந்த வருடத்தில் பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டின் நிர்வாகச் செலவுகளில் இருந்து செய்யப்பட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement