• Apr 02 2025

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் அவர்கள் ஒன்றாக வாழ்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?- ஜே.வி.பியிடம் கேட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன்

Tharun / Mar 31st 2024, 5:36 pm
image

வடக்கையும் கிழக்கையும் பிரித்த பெருமை உங்களிடம்தான் இருக்கிறது. அதில் என்ன சந்தோசம் என ஜே.வி.பியினரிடம்  சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுள்ளார். 

இன்று இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஜேவிபியின்  தலைவர் ஜனாதிபதி தேர்தலில்  வெல்வதற்கான சாத்தியப்பாடுகள் மிக அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இங்கிருக்கக்  கூடிய பத்திரிகை, மக்கள் மத்தியில் செய்துள்ள ஆய்வுகளின் பிரகாரம்  அவருக்கு 50 வீதத்துக்கும் மேலான வாக்குகளும் வெளியில் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அது ஒரு பக்கம் நடக்குமா என்பது ஒருபக்கம் இருக்கும் கேள்வியாக இருந்தும் கூட, அண்மையில் இப்பொழுது நான் அரசியல் வியாபாரம் செய்ய வரவில்லை என்றும். அதை நிறைவேற்றுவதை கொடுப்பதா?, அல்லது கொடுப்பதில்லையா? என்று பேசுவதற்கு நான் வரவில்லை. என்றும், அவர் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டத்தில் பேசி இருக்கின்றார்.

அதன் பிற்பாடு கனடா போய்விட்டு அந்த கூட்டத்தின் போது தமிழ் மக்களுக்கும் 13க்கு விருப்பம் இருக்கவில்லை.  சிங்கள தரப்பிலும் விரும்பவில்லை என்ற கோணத்திலும், மக்கள் கேட்டால் நாங்கள் அதை செய்வோம் என்ற   கோணத்திலும் பேசியதாக சொல்லப்படுகிறது. இவற்றில் எந்தளவுக்கு உண்மைத்தன்மை இருக்கும் என்பது தொடர்பில் நிச்சயமாக எங்களுக்கு தெரியாது. 

அங்கு சிங்கள மொழியில் பேசிய விடயங்கள் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்பதும் எங்களுக்கு தெரியாது. இலங்கையில் அவர்கள் 13 அல்லது மாகாண  சபை முறைமையை முழுமையாக ஏற்றுக்கொண்டது இல்லை என்பதும், தமிழ் பேசும் மாகாணங்காளான வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாண சபையாக இருந்தது. 

அதனை மாற்றியமைப்பதற்காக நீதிமன்றம் சென்று வழக்காடி அதனை இல்லாமல் செய்தது ஜனதா விமுக்தி பெரமுனவைத்தான்(ஜே.வி.பி) சாரும். அதனை செய்த போது பெரும் சாதனையை நிலைநாட்டி விட்டதாகவும் தம்மை பற்றி வெளியில் பேசுகின்ற போது சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் ஒன்றாக வாழ்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது? வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு நிலப்பரப்பாக ஒரு மாகாண சபையாக இயங்குவதில் உங்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது? இது தொடர்பில் ஜனதா விமுக்தி பெரமுனவிடம் எந்த விதமான பதில்களும் இல்லை என்பது தான் உண்மையான விடயம். என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் அவர்கள் ஒன்றாக வாழ்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை- ஜே.வி.பியிடம் கேட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் வடக்கையும் கிழக்கையும் பிரித்த பெருமை உங்களிடம்தான் இருக்கிறது. அதில் என்ன சந்தோசம் என ஜே.வி.பியினரிடம்  சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுள்ளார். இன்று இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜேவிபியின்  தலைவர் ஜனாதிபதி தேர்தலில்  வெல்வதற்கான சாத்தியப்பாடுகள் மிக அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இங்கிருக்கக்  கூடிய பத்திரிகை, மக்கள் மத்தியில் செய்துள்ள ஆய்வுகளின் பிரகாரம்  அவருக்கு 50 வீதத்துக்கும் மேலான வாக்குகளும் வெளியில் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அது ஒரு பக்கம் நடக்குமா என்பது ஒருபக்கம் இருக்கும் கேள்வியாக இருந்தும் கூட, அண்மையில் இப்பொழுது நான் அரசியல் வியாபாரம் செய்ய வரவில்லை என்றும். அதை நிறைவேற்றுவதை கொடுப்பதா, அல்லது கொடுப்பதில்லையா என்று பேசுவதற்கு நான் வரவில்லை. என்றும், அவர் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டத்தில் பேசி இருக்கின்றார்.அதன் பிற்பாடு கனடா போய்விட்டு அந்த கூட்டத்தின் போது தமிழ் மக்களுக்கும் 13க்கு விருப்பம் இருக்கவில்லை.  சிங்கள தரப்பிலும் விரும்பவில்லை என்ற கோணத்திலும், மக்கள் கேட்டால் நாங்கள் அதை செய்வோம் என்ற   கோணத்திலும் பேசியதாக சொல்லப்படுகிறது. இவற்றில் எந்தளவுக்கு உண்மைத்தன்மை இருக்கும் என்பது தொடர்பில் நிச்சயமாக எங்களுக்கு தெரியாது. அங்கு சிங்கள மொழியில் பேசிய விடயங்கள் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்பதும் எங்களுக்கு தெரியாது. இலங்கையில் அவர்கள் 13 அல்லது மாகாண  சபை முறைமையை முழுமையாக ஏற்றுக்கொண்டது இல்லை என்பதும், தமிழ் பேசும் மாகாணங்காளான வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாண சபையாக இருந்தது. அதனை மாற்றியமைப்பதற்காக நீதிமன்றம் சென்று வழக்காடி அதனை இல்லாமல் செய்தது ஜனதா விமுக்தி பெரமுனவைத்தான்(ஜே.வி.பி) சாரும். அதனை செய்த போது பெரும் சாதனையை நிலைநாட்டி விட்டதாகவும் தம்மை பற்றி வெளியில் பேசுகின்ற போது சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் ஒன்றாக வாழ்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு நிலப்பரப்பாக ஒரு மாகாண சபையாக இயங்குவதில் உங்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது இது தொடர்பில் ஜனதா விமுக்தி பெரமுனவிடம் எந்த விதமான பதில்களும் இல்லை என்பது தான் உண்மையான விடயம். என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement