• Nov 24 2024

நாட்டில் அதிகரித்த தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள்! - அநுர அரசு மீது குற்றம்சுமத்தும் சாகர

Chithra / Oct 29th 2024, 9:29 am
image

 

நாட்டில் அண்மைக்காலமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான செய்திகள் அதிகளவில் வெளியாகி வருவதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சாகர காரியவசம்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இந்நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஆனால் அவற்றினை நாமே திட்டமிட்டு முன்னெடுப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

இது முற்றிலும் தவறானது. தேசிய பாதுகாப்பு அச்சங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட விஷயங்கள் எங்களால் எழுப்பப்படவில்லை.

அமெரிக்க தூதரகம் மற்றும் இந்த நாட்டிலுள்ள பிரித்தானிய தூதரகம் தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவற்றை வெளியிட்டிருந்தன. 

ஆனால் அதுவரை அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுத்திருக்கவில்லை.

தூதரங்கள் வெளியிட்ட பின்னரே படையினரை கொண்டு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருந்தனர். 

நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டு வருகின்றன என சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் அதிகரித்த தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் - அநுர அரசு மீது குற்றம்சுமத்தும் சாகர  நாட்டில் அண்மைக்காலமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான செய்திகள் அதிகளவில் வெளியாகி வருவதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சாகர காரியவசம்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.அண்மைக்காலமாக இந்நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.ஆனால் அவற்றினை நாமே திட்டமிட்டு முன்னெடுப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.இது முற்றிலும் தவறானது. தேசிய பாதுகாப்பு அச்சங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட விஷயங்கள் எங்களால் எழுப்பப்படவில்லை.அமெரிக்க தூதரகம் மற்றும் இந்த நாட்டிலுள்ள பிரித்தானிய தூதரகம் தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவற்றை வெளியிட்டிருந்தன. ஆனால் அதுவரை அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுத்திருக்கவில்லை.தூதரங்கள் வெளியிட்ட பின்னரே படையினரை கொண்டு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருந்தனர். நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டு வருகின்றன என சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement