• Dec 09 2024

அதிகரிக்கும் வட் வரி...! விவசாயத் துறைக்கு ஏற்படவுள்ள பாதிப்பு...!samugammedia

Sharmi / Dec 22nd 2023, 1:42 pm
image

எதிர்வரும் தைமாதம் முதல் இலங்கையில் பெறுமதி சேர் வரியினை (VAT) 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

VAT அதிகரிப்புடன் பல்வேறு வகையான பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு நிலையில், VAT அதிகரிக்கப்படுவதால் விவசாய உபகரணங்களின் விலைகளும்  வேகமாக உயரும் என விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை பயிர்ச்செய்கைக்கு அத்தியாவசியமான மண் வெட்டியின் விலை கூட அதிகரித்து வருவதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன கவலை தெரிவித்துள்ளார்.

அதேவேளை பயிர்ச் செய்கைக்கான உரத்தின் விலையும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில்  உணவுப் பண்டங்களின் விலைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





அதிகரிக்கும் வட் வரி. விவசாயத் துறைக்கு ஏற்படவுள்ள பாதிப்பு.samugammedia எதிர்வரும் தைமாதம் முதல் இலங்கையில் பெறுமதி சேர் வரியினை (VAT) 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.VAT அதிகரிப்புடன் பல்வேறு வகையான பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறானதொரு நிலையில், VAT அதிகரிக்கப்படுவதால் விவசாய உபகரணங்களின் விலைகளும்  வேகமாக உயரும் என விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அதேவேளை பயிர்ச்செய்கைக்கு அத்தியாவசியமான மண் வெட்டியின் விலை கூட அதிகரித்து வருவதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன கவலை தெரிவித்துள்ளார்.அதேவேளை பயிர்ச் செய்கைக்கான உரத்தின் விலையும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறானதொரு நிலையில்  உணவுப் பண்டங்களின் விலைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement