• Feb 04 2025

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்..!

Sharmi / Feb 4th 2025, 12:26 pm
image

இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில், திருகோணமலை - தோப்பூர் பொலிஸ் நிலையத்தில் இன்று (04) இடம்பெற்றது.

தோப்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எப்.எம்.றமீஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் தோப்பூர் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், தோப்பூர் பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


வவுனியாவில் கலாசார பாரம்பரியத்துடன் எளிமையான முறையில் சுதந்திர தின நிகழ்வு

வவுனியா மாவட்ட செயலகத்தில் எளிமையான முறையில் மூவின கலாசார பாரம்பரியத்துடன் இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் குறித்த நிகழ்வானது இன்று காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன், தேசியக் கொடியினை மாவட்ட செயலாளர் ஏற்றி வைத்திருந்தார்.

இதன் பாேது மாவட்ட செயலக உத்தியாேகத்தர்களால் தமிழ், சிங்கள மாெழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களிற்காக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.

அதனை தாெடர்ந்து தமிழ் சிங்கள முஸ்லிம் கலாசாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மன்னார் மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்

 'தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்' எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று(4) கொண்டாடப்படுகின்றது.

அதற்கு அமைவாக சுதந்திர தின நிகழ்வுகள் இன்று  (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சமாதான புறா பறக்கவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் மாவட்டச் செயலக அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 வது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக, கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இன்றையதினம் காலை  அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத்  தலைமையில் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து மரியாதையுடன் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

இலங்கைத் திருநாட்டை கடந்த 77 வருடங்களுக்கு முன்னர் போத்துக்கீசர்,ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிப் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு இதுபோன்ற ஒரு தினத்திலேயே எமக்கு இந்த சுதந்திரம் பெற்றுத்தரப்பட்டது என்பது தொடர்பாகவும் அதற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றிய வரலாறுகளும் அதிபரினால்  நினைவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 77 வது சுதந்திர தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று(4) காலை கொண்டாடப்பட்டது 

இந்த நிகழ்வு, மாவட்ட செயலாளர் எச்.டபிள்யு ஹேமந்தகுமார தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட தேசிய  மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமனவினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், நாட்டுக்காக தியாகம் செய்த முப்படை வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன்  இடம்பெற்ற, இந்த நிகழ்வில், இலங்கையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல்லின கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அதேவேளை, மாவட்ட செயலக வளாகத்தில் மரம் நடுகையும் இடம்பெற்றதோடு, கலை கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக செயலாளர் எஸ் சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட  ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக அமைப்பின் சுதந்திர தின நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு ஒன்று இன்று கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. நிகழ்வில் 400க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து இன மதங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் தேசியக்கொடியினை சர்வ மதத் தலைவர்கள் இணைந்து ஏற்றி வைத்ததை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து சுதந்திர தின நிகழ்வுகள் சர்வமத பிரார்த்தனையுடன் இடம்பெற்றதுடன், இரத்ததானமும் இடம்பெற்றது.




கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை  பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த  நிகழ்வுகள் இன்றையதினம்(04) இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம்.அன்சார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
 
அத்துடன், தேசத்தைக் கட்டி எழுப்பும் ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பிலும் அதற்கு நாம் ஆற்ற வேண்டிய கடப்பாடு தொடர்பிலும் பிரதேச செயலாளரினால் தெளிவூட்டப்பட்டது.

மேலும், இந் நிகழ்வுக்கு பிரதேச செயலக  நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர்  எ. ஆர். எம். சாலிஹ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலக வளாகத்தில் மரம் நடுகையும் மேற்கொள்ளப்பட்டமையுடன்  அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தன.









வடக்கு கிழக்கில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள். இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்று வருகின்றது.அந்தவகையில், திருகோணமலை - தோப்பூர் பொலிஸ் நிலையத்தில் இன்று (04) இடம்பெற்றது.தோப்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எப்.எம்.றமீஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.இதில் தோப்பூர் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், தோப்பூர் பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.வவுனியாவில் கலாசார பாரம்பரியத்துடன் எளிமையான முறையில் சுதந்திர தின நிகழ்வுவவுனியா மாவட்ட செயலகத்தில் எளிமையான முறையில் மூவின கலாசார பாரம்பரியத்துடன் இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் குறித்த நிகழ்வானது இன்று காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன், தேசியக் கொடியினை மாவட்ட செயலாளர் ஏற்றி வைத்திருந்தார்.இதன் பாேது மாவட்ட செயலக உத்தியாேகத்தர்களால் தமிழ், சிங்கள மாெழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களிற்காக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.அதனை தாெடர்ந்து தமிழ் சிங்கள முஸ்லிம் கலாசாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.மன்னார் மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் 'தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்' எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று(4) கொண்டாடப்படுகின்றது.அதற்கு அமைவாக சுதந்திர தின நிகழ்வுகள் இன்று  (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.மன்னார் மாவட்ட செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.அதனைத் தொடர்ந்து சமாதான புறா பறக்கவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் இடம் பெற்றது.குறித்த நிகழ்வில் மாவட்டச் செயலக அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 வது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக, கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இன்றையதினம் காலை  அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத்  தலைமையில் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து மரியாதையுடன் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.இலங்கைத் திருநாட்டை கடந்த 77 வருடங்களுக்கு முன்னர் போத்துக்கீசர்,ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிப் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு இதுபோன்ற ஒரு தினத்திலேயே எமக்கு இந்த சுதந்திரம் பெற்றுத்தரப்பட்டது என்பது தொடர்பாகவும் அதற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றிய வரலாறுகளும் அதிபரினால்  நினைவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுஇலங்கையின் 77 வது சுதந்திர தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று(4) காலை கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வு, மாவட்ட செயலாளர் எச்.டபிள்யு ஹேமந்தகுமார தலைமையில் இடம்பெற்றது.திருகோணமலை மாவட்ட தேசிய  மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமனவினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், நாட்டுக்காக தியாகம் செய்த முப்படை வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன்  இடம்பெற்ற, இந்த நிகழ்வில், இலங்கையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல்லின கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.அதேவேளை, மாவட்ட செயலக வளாகத்தில் மரம் நடுகையும் இடம்பெற்றதோடு, கலை கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக செயலாளர் எஸ் சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட  ஊழியர்களும் கலந்து கொண்டனர்.கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக அமைப்பின் சுதந்திர தின நிகழ்வுகிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு ஒன்று இன்று கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. நிகழ்வில் 400க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.அனைத்து இன மதங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் தேசியக்கொடியினை சர்வ மதத் தலைவர்கள் இணைந்து ஏற்றி வைத்ததை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.தொடர்ந்து சுதந்திர தின நிகழ்வுகள் சர்வமத பிரார்த்தனையுடன் இடம்பெற்றதுடன், இரத்ததானமும் இடம்பெற்றது.கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுநாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை  பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த  நிகழ்வுகள் இன்றையதினம்(04) இடம்பெற்றது.கல்முனை பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம்.அன்சார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அத்துடன், தேசத்தைக் கட்டி எழுப்பும் ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பிலும் அதற்கு நாம் ஆற்ற வேண்டிய கடப்பாடு தொடர்பிலும் பிரதேச செயலாளரினால் தெளிவூட்டப்பட்டது.மேலும், இந் நிகழ்வுக்கு பிரதேச செயலக  நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர்  எ. ஆர். எம். சாலிஹ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.பிரதேச செயலக வளாகத்தில் மரம் நடுகையும் மேற்கொள்ளப்பட்டமையுடன்  அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தன.

Advertisement

Advertisement

Advertisement