இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், தோப்பூர் நூரிய்யா அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மௌலவி மாணவர்களின் பேரணி நிகழ்வு இன்று(04) காலை இடம்பெற்றது.
இதன்போது, மௌலவி மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தியவாறு வீதிகள் தோறும் பேரணியாக பயணித்தனர்.
அரபுக் கல்லூரியிலிருந்து ஆரம்பமான பேரணியானது, தோப்பூர் பிரதான வீதி மற்றும் உள் வீதிகளுக்கூடாக பயணித்து மீண்டும் அரபுக் கல்லூரியை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தோப்பூரில் மௌலவி மாணவர்களின் சுதந்திர தின பேரணி. இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்று வருகின்றது.அந்தவகையில், தோப்பூர் நூரிய்யா அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மௌலவி மாணவர்களின் பேரணி நிகழ்வு இன்று(04) காலை இடம்பெற்றது.இதன்போது, மௌலவி மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தியவாறு வீதிகள் தோறும் பேரணியாக பயணித்தனர்.அரபுக் கல்லூரியிலிருந்து ஆரம்பமான பேரணியானது, தோப்பூர் பிரதான வீதி மற்றும் உள் வீதிகளுக்கூடாக பயணித்து மீண்டும் அரபுக் கல்லூரியை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.