• Oct 05 2024

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடை தொடர்பில் அறிவிப்பு!

Chithra / Mar 24th 2024, 12:23 pm
image

Advertisement

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அங்கு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக அளவில் வெங்காயம் கையிருப்பை வைக்கவும் நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பரில், இந்திய அரசு பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த நிலையில், எதிர்வரும் 31ஆம் திகதியுடன் இந்த ஏற்றுமதி தடை நிறைவடையவிருந்தது.

இந்தியா விதித்துள்ள இந்த தடையால், பல நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

மேலும் இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடை தொடர்பில் அறிவிப்பு பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அங்கு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக அளவில் வெங்காயம் கையிருப்பை வைக்கவும் நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த டிசம்பரில், இந்திய அரசு பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த நிலையில், எதிர்வரும் 31ஆம் திகதியுடன் இந்த ஏற்றுமதி தடை நிறைவடையவிருந்தது.இந்தியா விதித்துள்ள இந்த தடையால், பல நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.மேலும் இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement