தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு அறிவித்தல் விடுத்துள்ளது.
இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், 1991இல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதன் பின்னரே இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 2009இல் இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபோதும், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை, இந்தியாவில் தொடர்ந்து வருகிறது.
இதன் ஒரு நடவடிக்கையாக, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர் என்று குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன், குறித்த ஆதரவாளர்கள், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான வெறுப்புணர்வை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்தது இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு அறிவித்தல் விடுத்துள்ளது.இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், 1991இல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.இதன் பின்னரே இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், 2009இல் இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபோதும், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை, இந்தியாவில் தொடர்ந்து வருகிறது.இதன் ஒரு நடவடிக்கையாக, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர் என்று குற்றம் சுமத்தியுள்ளது.அத்துடன், குறித்த ஆதரவாளர்கள், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான வெறுப்புணர்வை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.