இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையிலான எஞ்சியிருக்கும் இரு ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் சூப்பர் ஓவர் விதியை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இதை உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளதாக டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.
இதன்போது சூப்பர் ஓவர் விதி நடைமுறைப்படுத்தவில்லை.
இது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சூப்பர் ஓவர் விதிகளின் படி எந்த ஒரு T20 போட்டி சமநிலையில் முடிந்தாலும் சூப்பர் ஓவர் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.
ஒருநாள் அப்படி எந்த விதிமுறையும் இல்லை. ஒவ்வொரு தொடருக்கும் சூப்பர் ஓவர் தொடர்பான விதிகளை அந்த தொடரை நடத்தும் நாடு அல்லது அமைப்பு முடிவு செய்து கொள்ளலாம்.
இந்தியா - இலங்கை ஆடிவரும் இந்த ஒரு நாள் தொடரில் அது போன்ற விதிமுறைகள் ஏதும் வகுக்கப்படவில்லை. எனவே போட்டி சமநிலையில் முடிந்தால் அத்துடன் போட்டி முடிவுக்கு வந்துவிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்தும் ஒருநாள் போட்டி உலகக் கிண்ணம், சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடர்களில் நாக் அவுட் போட்டிகளுக்கு மட்டும் டை ஆனால் சூப்பர் ஓவர் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இதுவரை இருந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு டிசம்பரில் புதுப்பிக்கப்பட்ட போட்டி விதிகளின்படி, போட்டி சமநிலையில் முடிந்தால் சூப்பர் ஓவர் மூலம் வெற்றியை தீர்மானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 44 முறை ஒருநாள் போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன. எனினும், இவை அனைத்தும் புதிய விதி புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு இருந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் 230 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிந்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. பகல் இரவு ஆட்டமாக இடம்பெறும் இந்தப் போட்டி கொழும்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியில் சர்ச்சை இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையிலான எஞ்சியிருக்கும் இரு ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் சூப்பர் ஓவர் விதியை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.இதை உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளதாக டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.இரு அணிகளுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.இதன்போது சூப்பர் ஓவர் விதி நடைமுறைப்படுத்தவில்லை.இது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சூப்பர் ஓவர் விதிகளின் படி எந்த ஒரு T20 போட்டி சமநிலையில் முடிந்தாலும் சூப்பர் ஓவர் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.ஒருநாள் அப்படி எந்த விதிமுறையும் இல்லை. ஒவ்வொரு தொடருக்கும் சூப்பர் ஓவர் தொடர்பான விதிகளை அந்த தொடரை நடத்தும் நாடு அல்லது அமைப்பு முடிவு செய்து கொள்ளலாம்.இந்தியா - இலங்கை ஆடிவரும் இந்த ஒரு நாள் தொடரில் அது போன்ற விதிமுறைகள் ஏதும் வகுக்கப்படவில்லை. எனவே போட்டி சமநிலையில் முடிந்தால் அத்துடன் போட்டி முடிவுக்கு வந்துவிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்தும் ஒருநாள் போட்டி உலகக் கிண்ணம், சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடர்களில் நாக் அவுட் போட்டிகளுக்கு மட்டும் டை ஆனால் சூப்பர் ஓவர் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இதுவரை இருந்துள்ளது.2023 ஆம் ஆண்டு டிசம்பரில் புதுப்பிக்கப்பட்ட போட்டி விதிகளின்படி, போட்டி சமநிலையில் முடிந்தால் சூப்பர் ஓவர் மூலம் வெற்றியை தீர்மானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு 44 முறை ஒருநாள் போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன. எனினும், இவை அனைத்தும் புதிய விதி புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு இருந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் 230 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிந்தது.இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. பகல் இரவு ஆட்டமாக இடம்பெறும் இந்தப் போட்டி கொழும்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.