இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான வானிலை, வெள்ளப் பேரழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களை ஆதரிப்பதற்காக இந்திய அரசு அவசர நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்திய–இலங்கை இருநாட்டு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், உடனடி மனிதாபிமான உதவி வழங்குவதை இந்தியா ஆரம்பித்துள்ளது.
அதன்படி, 80 தொன் மருத்துவ மற்றும் சுகாதார நிவாரணப் பொருட்களுடன் கூடிய சிறப்பு விமானம் இன்று (29) அதிகாலை கொழும்பை வந்தடைந்தது. வந்தடைந்த நிவாரணப் பொருட்கள் இலங்கை விமானப்படையால் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கப்பட்டன.
மேலும், இந்திய நிவாரணப் பொருட்கள் கொண்ட மற்றொரு சிறப்பு விமானமும் இன்று (29) இலங்கையை வந்தடைய உள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் கடுமையான பாதிப்புகளை சமாளிக்க இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கத் தயார் எனவும் இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நிவாரணப் பொருட்களுடன் இலங்கையை வந்தடைந்த இந்திய விமானம் இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான வானிலை, வெள்ளப் பேரழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களை ஆதரிப்பதற்காக இந்திய அரசு அவசர நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இந்திய–இலங்கை இருநாட்டு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், உடனடி மனிதாபிமான உதவி வழங்குவதை இந்தியா ஆரம்பித்துள்ளது.அதன்படி, 80 தொன் மருத்துவ மற்றும் சுகாதார நிவாரணப் பொருட்களுடன் கூடிய சிறப்பு விமானம் இன்று (29) அதிகாலை கொழும்பை வந்தடைந்தது. வந்தடைந்த நிவாரணப் பொருட்கள் இலங்கை விமானப்படையால் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கப்பட்டன.மேலும், இந்திய நிவாரணப் பொருட்கள் கொண்ட மற்றொரு சிறப்பு விமானமும் இன்று (29) இலங்கையை வந்தடைய உள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கையின் கடுமையான பாதிப்புகளை சமாளிக்க இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கத் தயார் எனவும் இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.