இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான 'ஐ.என்.எஸ் மும்பை' எனும் போர்க்கப்பல் 3 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நாளை (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இப்போர்க்கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் இந்திய - இலங்கை கடற்படையினருக்கு இடையிலான அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில், இலங்கை கடற்படையினர் அக்கப்பலுக்கு சிநேகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அதனைப் பார்வையிடுவர்.
அதேபோன்று இக்கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தவுடன் அக்கப்பலின் கட்டளை அதிகாரி இலங்கையின் மேற்கு கடற்பரப்புக்கான தளபதி ரியர் அட்மிரல் டபிள்யு.டி.சி.யு.குமாரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடுவார்.
அதுமாத்திரமன்றி இக்கப்பல் விஜயத்தின்போது இலங்கை கடற்படையினருடன் இணைந்து விளையாட்டு நிகழ்வுகள், யோகாசனம், கடற்பரப்பு தூய்மையாக்கல் ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை இலங்கை, வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடற்படை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் சீன கடற்படைக்கு சொந்தமான போலன் என்ற கப்பல் சீனாவின் வடகிழக்கில் உள்ள டேலியன் மாகாணத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இக்கப்பல் இம்மாதம் இறுதி வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளது.
85 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் 18 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கக் கூடியது. 50 கடற்படை கேடட்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வசதியும் உள்ளது.
கடற்படை அதிகாரிகளிடையே தொழில்முறை திறன்களை வளர்ப்பது மற்றும் பிற நாடுகளின் கடற்படைகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பொதுவான எதிர்காலத்துடன் கடல் நடவடிக்கைகளை தொடங்குவது இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்று கப்பலின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கையை வந்தடையவுள்ள இந்தியா மற்றும் சீனாவின் போர்க்கப்பல்கள். இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான 'ஐ.என்.எஸ் மும்பை' எனும் போர்க்கப்பல் 3 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நாளை (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.இப்போர்க்கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் இந்திய - இலங்கை கடற்படையினருக்கு இடையிலான அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில், இலங்கை கடற்படையினர் அக்கப்பலுக்கு சிநேகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அதனைப் பார்வையிடுவர்.அதேபோன்று இக்கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தவுடன் அக்கப்பலின் கட்டளை அதிகாரி இலங்கையின் மேற்கு கடற்பரப்புக்கான தளபதி ரியர் அட்மிரல் டபிள்யு.டி.சி.யு.குமாரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடுவார்.அதுமாத்திரமன்றி இக்கப்பல் விஜயத்தின்போது இலங்கை கடற்படையினருடன் இணைந்து விளையாட்டு நிகழ்வுகள், யோகாசனம், கடற்பரப்பு தூய்மையாக்கல் ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை இலங்கை, வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடற்படை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் சீன கடற்படைக்கு சொந்தமான போலன் என்ற கப்பல் சீனாவின் வடகிழக்கில் உள்ள டேலியன் மாகாணத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இக்கப்பல் இம்மாதம் இறுதி வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளது.85 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் 18 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கக் கூடியது. 50 கடற்படை கேடட்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வசதியும் உள்ளது.கடற்படை அதிகாரிகளிடையே தொழில்முறை திறன்களை வளர்ப்பது மற்றும் பிற நாடுகளின் கடற்படைகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பொதுவான எதிர்காலத்துடன் கடல் நடவடிக்கைகளை தொடங்குவது இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்று கப்பலின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.