நோன்புப் பெருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள 150 ஆதரவற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் நேற்றையதினம்(17) வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்.இந்திய துணைத் தூதர் சாய் முரளி , ஆர் நாகராஜன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் இணைப்பாளர் பாரிஸ், மன்னார் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுல்பிகார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய யாழ்.இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி,
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்பான ஈத்-அல்-ஆதா நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வரும் நாட்களில் மேலும் பல பொது நலத் திட்டங்களை நடத்துவதற்கும் சமூக ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் இந்திய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்திய துணைத் தூதரகத்தினால் மன்னாரிலுள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு. நோன்புப் பெருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள 150 ஆதரவற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் நேற்றையதினம்(17) வழங்கிவைக்கப்பட்டது.இந்நிகழ்வில் யாழ்.இந்திய துணைத் தூதர் சாய் முரளி , ஆர் நாகராஜன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் இணைப்பாளர் பாரிஸ், மன்னார் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுல்பிகார் ஆகியோர் கலந்துகொண்டனர்.நிகழ்வில் உரையாற்றிய யாழ்.இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி,இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்பான ஈத்-அல்-ஆதா நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். வரும் நாட்களில் மேலும் பல பொது நலத் திட்டங்களை நடத்துவதற்கும் சமூக ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் இந்திய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.