• May 08 2024

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை...!

Sharmi / Feb 16th 2024, 11:58 am
image

Advertisement

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 03ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்குஅண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் 20பேர்  5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

இரண்டு படகுகளின் ஓட்டுனர்களுக்கும் ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுடன், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன் ஒரு மீனவர் இரண்டாவது தடவையும் எல்லை தாண்டி வந்ததனால் அவருக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை நிறைவுற்ற பின்னர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை. எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 03ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்குஅண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.இதில் 20பேர்  5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.இரண்டு படகுகளின் ஓட்டுனர்களுக்கும் ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுடன், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன் ஒரு மீனவர் இரண்டாவது தடவையும் எல்லை தாண்டி வந்ததனால் அவருக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை நிறைவுற்ற பின்னர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement