கடற்படையினரின் அதிகார திமிர்த்தனங்களை எங்கள் மக்கள் எப்போதும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மாதகல் சம்பில்துறையிலுள்ள விகாரையைச் சூழவுள்ள கடற்பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கையை முன்னெடுக்க இலங்கை கடற்படையினர் தடைவிதித்துள்ளமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அப்பு ஆச்சியர் ஆண்ட எம் தேசத்தில் அத்துமீறிக் குடிகொண்டு, எங்கள் மண்ணிலே- கடலிலே நாங்கள் தொழில் செய்வதற்கு தடைகள் விதிப்பதற்கு சிறிலங்கா கடற்படைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்துத்தான் நீங்கள் விகாரைகளில் வழிபாடு நடத்தவேண்டுமா? உங்கள் அதிகாரத் திமிர்த்தனங்களை எங்கள் மக்கள் எப்போதும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்காதீர்கள்.
போர்க்காலத்தில் எங்கள் கடற்பரப்பில் நாங்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு சிறிலங்கா கடற்படையால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இன்று போர் முடிந்து விட்டது. சிவில் நிர்வாகம் ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகின்ற சூழலில் கடற்படையினர் சிவில் நிர்வாகத்தில்- கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் விவகாரத்தில் தலையிடுகின்றனர்.
ஐ.நா மனித உரிமைகள் சபையின் அமர்வு ஆரம்பமாகியுள்ள காலத்தில், கடற்படையினரின் சிவில் நிர்வாகத்தின் மீதான தலையீடு கண்டிக்கப்படவேண்டும்.
தென்னிலங்கையில் பல இடங்களில் விகாரைகளைச் சூழவுள்ள கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
அவையொன்றும் விகாரையின் அழகை கெடுக்கவில்லையா? தமிழர்கள் என்பதற்காகவே எங்கள் மீது எவ்வளவு காலத்துக்கு இவ்வாறான பாகுபாடுகளை மேற்கொள்ளப்போகின்றீர்கள்?
விகாரைக்கு அண்மையாக மீனைக் கொல்லுவதாகக் கடற்படையினர் கூறுகின்றனர். வாழ்வாதாரத்தைக் கெடுத்து- பட்டினிபோட்டு எங்களைக் கொல்லச் சொல்லியா உங்கள் புத்தர் பெருமான் உபதேசித்திருக்கின்றார்?
சம்பில்துறையில் தலைமுறைகளாக எமது மக்கள் தொழில் செய்து வருகின்றார்கள்.
எப்போதும் இல்லாது திடீரென கடற்படையினர் அந்தப் பகுதியில் கடற்றொழிலை முன்னெடுக்க தடை விதிப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. ஏற்கனவே அந்த விகாரைக்கு அண்மையாக, எங்கள் மக்களின் காணிகளை அத்துமீறி பிடித்த கடற்படையினர் விடுதியை அமைத்து சிங்களவர்கள் தங்க வைக்கின்றனர்.
இப்போது எங்கள் கடலையும் கையகப்படுத்தி அதிலும் விடுதி அமைக்கப்போகின்றார்களா என்ற நியாயமான சந்தேகம் எழத்தான் செய்கின்றது.
அத்துமீறும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த முடியாத – கையாலாகாத கடற்படையினர் எங்கள் மக்களிடம் மாத்திரம் தங்கள் வீரத்தை காட்டுகின்றனர்.
நீங்கள் எங்கள் வாழ்வாதாரத்தில் வயிற்றிலடிப்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கவேண்டும். அமைதியை விரும்பும் எங்கள் மக்களை வலிந்து சீண்டுகின்றீர்கள். விளைவுகள் விபரீதமாக இருக்கும் என சிறிலங்கா கடற்படையை எச்சரிக்க விரும்புகின்றேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தமுடியாத கையாலாகாத கடற்படையினர். சரவணபவன் குற்றச்சாட்டு. கடற்படையினரின் அதிகார திமிர்த்தனங்களை எங்கள் மக்கள் எப்போதும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.மாதகல் சம்பில்துறையிலுள்ள விகாரையைச் சூழவுள்ள கடற்பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கையை முன்னெடுக்க இலங்கை கடற்படையினர் தடைவிதித்துள்ளமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,அப்பு ஆச்சியர் ஆண்ட எம் தேசத்தில் அத்துமீறிக் குடிகொண்டு, எங்கள் மண்ணிலே- கடலிலே நாங்கள் தொழில் செய்வதற்கு தடைகள் விதிப்பதற்கு சிறிலங்கா கடற்படைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்துத்தான் நீங்கள் விகாரைகளில் வழிபாடு நடத்தவேண்டுமா உங்கள் அதிகாரத் திமிர்த்தனங்களை எங்கள் மக்கள் எப்போதும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்காதீர்கள்.போர்க்காலத்தில் எங்கள் கடற்பரப்பில் நாங்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு சிறிலங்கா கடற்படையால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இன்று போர் முடிந்து விட்டது. சிவில் நிர்வாகம் ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகின்ற சூழலில் கடற்படையினர் சிவில் நிர்வாகத்தில்- கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் விவகாரத்தில் தலையிடுகின்றனர்.ஐ.நா மனித உரிமைகள் சபையின் அமர்வு ஆரம்பமாகியுள்ள காலத்தில், கடற்படையினரின் சிவில் நிர்வாகத்தின் மீதான தலையீடு கண்டிக்கப்படவேண்டும். தென்னிலங்கையில் பல இடங்களில் விகாரைகளைச் சூழவுள்ள கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். அவையொன்றும் விகாரையின் அழகை கெடுக்கவில்லையா தமிழர்கள் என்பதற்காகவே எங்கள் மீது எவ்வளவு காலத்துக்கு இவ்வாறான பாகுபாடுகளை மேற்கொள்ளப்போகின்றீர்கள்விகாரைக்கு அண்மையாக மீனைக் கொல்லுவதாகக் கடற்படையினர் கூறுகின்றனர். வாழ்வாதாரத்தைக் கெடுத்து- பட்டினிபோட்டு எங்களைக் கொல்லச் சொல்லியா உங்கள் புத்தர் பெருமான் உபதேசித்திருக்கின்றார் சம்பில்துறையில் தலைமுறைகளாக எமது மக்கள் தொழில் செய்து வருகின்றார்கள்.எப்போதும் இல்லாது திடீரென கடற்படையினர் அந்தப் பகுதியில் கடற்றொழிலை முன்னெடுக்க தடை விதிப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. ஏற்கனவே அந்த விகாரைக்கு அண்மையாக, எங்கள் மக்களின் காணிகளை அத்துமீறி பிடித்த கடற்படையினர் விடுதியை அமைத்து சிங்களவர்கள் தங்க வைக்கின்றனர். இப்போது எங்கள் கடலையும் கையகப்படுத்தி அதிலும் விடுதி அமைக்கப்போகின்றார்களா என்ற நியாயமான சந்தேகம் எழத்தான் செய்கின்றது. அத்துமீறும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த முடியாத – கையாலாகாத கடற்படையினர் எங்கள் மக்களிடம் மாத்திரம் தங்கள் வீரத்தை காட்டுகின்றனர். நீங்கள் எங்கள் வாழ்வாதாரத்தில் வயிற்றிலடிப்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கவேண்டும். அமைதியை விரும்பும் எங்கள் மக்களை வலிந்து சீண்டுகின்றீர்கள். விளைவுகள் விபரீதமாக இருக்கும் என சிறிலங்கா கடற்படையை எச்சரிக்க விரும்புகின்றேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.