• Nov 23 2024

இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் திடீர் இரத்து?

Chithra / Aug 2nd 2024, 9:02 am
image

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான  உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புதுடில்லியில் உள்ள தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றையதினம் இலங்கைக் கடற்படையினரின் படகு மோதியதால் இந்திய மீனவர் படகொன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் பலியான சம்பவம் பதிவாகியிருந்தது.

இதனை அடுத்து டெல்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் இந்திய வெளியுறவு அமைச்சால் அழைக்கப்பட்டு இராஜதந்திர ரீதியிலான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளமை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்திய அரசாங்கத்தரப்பு இன்னும் இதனை உறுதிச்செய்யவில்லை.


இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் திடீர் இரத்து  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான  உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புதுடில்லியில் உள்ள தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.நேற்றையதினம் இலங்கைக் கடற்படையினரின் படகு மோதியதால் இந்திய மீனவர் படகொன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் பலியான சம்பவம் பதிவாகியிருந்தது.இதனை அடுத்து டெல்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் இந்திய வெளியுறவு அமைச்சால் அழைக்கப்பட்டு இராஜதந்திர ரீதியிலான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்தச் சூழ்நிலையில் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளமை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.இருப்பினும் இந்திய அரசாங்கத்தரப்பு இன்னும் இதனை உறுதிச்செய்யவில்லை.

Advertisement

Advertisement

Advertisement