ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (15) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
பல நாடுகளோடு இருதரப்பு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு வருகின்றோம். நாங்கள் முகம் கொடுத்திருக்கின்ற இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாக இருந்தால் எமக்கு வெளிநாட்டு நிதி தேவைப்படுகிறது.
நமது வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அப்படி கையிருப்பை குறுக்கிய காலத்தில் அதிகரித்துக் கொள்வதற்கு ஏற்ற ஒரு துறை தான் சுற்றுலாத்துறை. இவற்றை இலக்காக கொண்டு தான் வெளிநாட்டு அமைச்சுடன் இணைந்ததாக நாங்கள் புதிய அமைச்சு என்ற வகையில் இந்த அமைப்பை ஸ்தாபித்திருக்கிறோம். எனத் தெரிவித்தார்.
ஏப்ரலில் இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் - பல புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட திட்டம் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.இன்று (15) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.பல நாடுகளோடு இருதரப்பு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு வருகின்றோம். நாங்கள் முகம் கொடுத்திருக்கின்ற இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாக இருந்தால் எமக்கு வெளிநாட்டு நிதி தேவைப்படுகிறது.நமது வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அப்படி கையிருப்பை குறுக்கிய காலத்தில் அதிகரித்துக் கொள்வதற்கு ஏற்ற ஒரு துறை தான் சுற்றுலாத்துறை. இவற்றை இலக்காக கொண்டு தான் வெளிநாட்டு அமைச்சுடன் இணைந்ததாக நாங்கள் புதிய அமைச்சு என்ற வகையில் இந்த அமைப்பை ஸ்தாபித்திருக்கிறோம். எனத் தெரிவித்தார்.