• Sep 20 2024

நெற்கதிர்களில் - தொற்றியுள்ள மஞ்சல் எரிநோய்க்கு அரசாங்கம் வழங்கிய பசளையே காரணம் - ஆதங்கப்படும் விவசாயிகள் .!

Sharmi / Feb 3rd 2023, 10:39 am
image

Advertisement

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூநகர் - கட்டையாறு வெளியில் சுமார் 700 ஏக்கர் நெற்செய்கையில் மஞ்சல் எரிநோய் தாக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக பூநகர் - கட்டையாறு வெளியில் 1100 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நோய் தாக்கத்திற்கு அரசாங்கம் வழங்கிய பசளையே காரணம் என்று விவசாயிகள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.அத்துடன் இது ஒருவகையான பங்கஸ் நோய் என தெரிவிக்கப்படுவதாகவும் இதற்கான எண்ணைகளை தெளித்த போதும் எந்த பயனும் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதாக அரசாங்கம் கூறியபோதும் பல விவசாயிகளுக்கு எந்த நிவாரணங்களும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.!

நெற்கதிர்களில் - தொற்றியுள்ள மஞ்சல் எரிநோய்க்கு அரசாங்கம் வழங்கிய பசளையே காரணம் - ஆதங்கப்படும் விவசாயிகள் . திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூநகர் - கட்டையாறு வெளியில் சுமார் 700 ஏக்கர் நெற்செய்கையில் மஞ்சல் எரிநோய் தாக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.குறிப்பாக பூநகர் - கட்டையாறு வெளியில் 1100 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இந்த நோய் தாக்கத்திற்கு அரசாங்கம் வழங்கிய பசளையே காரணம் என்று விவசாயிகள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.அத்துடன் இது ஒருவகையான பங்கஸ் நோய் என தெரிவிக்கப்படுவதாகவும் இதற்கான எண்ணைகளை தெளித்த போதும் எந்த பயனும் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதாக அரசாங்கம் கூறியபோதும் பல விவசாயிகளுக்கு எந்த நிவாரணங்களும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement