• May 19 2024

நாளைய கரிநாள் பேரணிக்கு வலுச்சேருங்கள் - கட்சி பேதமின்றி ஒன்று திரளுங்கள் - மன்றாடும் உறவுகள்.!

Sharmi / Feb 3rd 2023, 10:36 am
image

Advertisement

நாளையதினம் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு வலுச்சேர்க்குமாறு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் சி.ஜெனிற்றா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படாத நிலையில் 37 கோடி ரூபாய்களை செலவளித்து சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது.தமிழ் மக்களுக்கான சுதந்திரம் 75 வருடங்களாக கிடைக்கவில்லை. எமக்கான உரிமைகள் கிடைக்காத நிலையில் இந்த சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை.

வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் எதிர்வரும் 5 ஆம் திகதி காலை 7 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

எனவே, குறித்த பேரணியில் அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைவதுடன், பொது அமைப்புக்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளைய கரிநாள் பேரணிக்கு வலுச்சேருங்கள் - கட்சி பேதமின்றி ஒன்று திரளுங்கள் - மன்றாடும் உறவுகள். நாளையதினம் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு வலுச்சேர்க்குமாறு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் சி.ஜெனிற்றா வேண்டுகோள் விடுத்துள்ளார்.வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படாத நிலையில் 37 கோடி ரூபாய்களை செலவளித்து சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது.தமிழ் மக்களுக்கான சுதந்திரம் 75 வருடங்களாக கிடைக்கவில்லை. எமக்கான உரிமைகள் கிடைக்காத நிலையில் இந்த சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை.வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் எதிர்வரும் 5 ஆம் திகதி காலை 7 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.எனவே, குறித்த பேரணியில் அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைவதுடன், பொது அமைப்புக்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement