• Jan 01 2025

காலநிலையால் பாதிப்படைந்த பயிர்நிலங்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கை தீவிரம்!

Chithra / Dec 27th 2024, 8:21 am
image

 

கடந்த மாதம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 80,000 ஏக்கர் பயிர்நிலங்கள் பாதிப்படைந்துள்ளதாக இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், சேதமடைந்துள்ள பயிர்நிலங்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த சபை தெரிவித்துள்ளது. 

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. 

குறித்த மாவட்டங்களுக்கான இறுதி அறிக்கைகள் கிடைத்த பின்னர் இழப்பீடு வழங்கப்படும் என விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. 

அத்துடன், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அநுராதபுரம், குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் பயிர்நிலங்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபை அறிவித்துள்ளது.


காலநிலையால் பாதிப்படைந்த பயிர்நிலங்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கை தீவிரம்  கடந்த மாதம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 80,000 ஏக்கர் பயிர்நிலங்கள் பாதிப்படைந்துள்ளதாக இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சேதமடைந்துள்ள பயிர்நிலங்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த சபை தெரிவித்துள்ளது. வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. குறித்த மாவட்டங்களுக்கான இறுதி அறிக்கைகள் கிடைத்த பின்னர் இழப்பீடு வழங்கப்படும் என விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. அத்துடன், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அநுராதபுரம், குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் பயிர்நிலங்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement