• Nov 23 2024

பொலிஸ் மா அதிபர் விவகாரம்; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கமாட்டோம்! - பிரதமர் அதிரடி அறிவிப்பு

Chithra / Jul 26th 2024, 10:50 am
image


பொலிஸ் மா அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்கமுடியாதென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமில்லை எனவும், பதில் பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (26) விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொலிஸ் மா அதிபரே இன்னமும் பொலிஸ் மா அதிபராக பதவி வகிக்கின்றார் எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் விவகாரம்; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கமாட்டோம் - பிரதமர் அதிரடி அறிவிப்பு பொலிஸ் மா அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்கமுடியாதென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமில்லை எனவும், பதில் பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (26) விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய பொலிஸ் மா அதிபரே இன்னமும் பொலிஸ் மா அதிபராக பதவி வகிக்கின்றார் எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement