• Sep 19 2024

சஜித்தின் அலுவலகத்திற்கு சென்ற தமிழ் எம்.பிக்கள் அவமதிப்பு- அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் நிலை?

Sharmi / Sep 17th 2024, 3:40 pm
image

Advertisement

நல்லாட்சிக் காலத்தில் எமது ஆதரவில் ஆட்சிக்கு வந்த சஜித் பிரேமதாச அக்காலத்தில் அவரது அலுவலகத்திற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றால் அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் நிலைமைகள் என்னவாகும் என சிந்தித்துப் பார்க்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தாங்கள் ஆட்சிக்கு வரும் வரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிபேசும் சிங்கள தலைவர்கள், ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ் மக்கள் தொடர்பில் சிந்திப்பில்லை.

அதன் காரணமாக எமது பிரச்சினைகளை நாங்கள் வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ரணிலோ, சஜித்தோ தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குறைந்தது இந்தியாவின் உதவியுடன் கொண்டுவரப்பட்ட 13வது திருத்ததினை கூட நிறைவேற்றமுடியாத நிலையில் இவர்களினால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வினை வழங்கமுடியும்.

தமிழ் பொதுவேட்பாளர் மூலம் எமது பிரச்சினைக்கான தீர்வினை வழங்க முடியாவிட்டாலும் தமிழர்களுக்குள்ள பிரச்சினைகளை சர்வதேசத்தின் முன்கொண்டு செல்லமுடிவதுடன் இந்த நாட்டில் உள்ள ஏனைய மக்களுக்கும் தமிழ் மக்களின் பிரச்சினையையும் அவர்களின் கோரிக்கையினையும் தெளிவாக வெளிப்படுத்தமுடியும் எனவும் தெரிவித்தார்.

தமிழர்களுக்கு இன்றுள்ள ஒரே தெரிவு தமிழ் பொதுவேட்பாளர் அதில் மாற்றுக்கருத்துகளை கொண்டிராமல் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றினையவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.


சஜித்தின் அலுவலகத்திற்கு சென்ற தமிழ் எம்.பிக்கள் அவமதிப்பு- அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் நிலை நல்லாட்சிக் காலத்தில் எமது ஆதரவில் ஆட்சிக்கு வந்த சஜித் பிரேமதாச அக்காலத்தில் அவரது அலுவலகத்திற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றால் அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் நிலைமைகள் என்னவாகும் என சிந்தித்துப் பார்க்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.மட்டு.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.தாங்கள் ஆட்சிக்கு வரும் வரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிபேசும் சிங்கள தலைவர்கள், ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ் மக்கள் தொடர்பில் சிந்திப்பில்லை.அதன் காரணமாக எமது பிரச்சினைகளை நாங்கள் வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.கடந்த காலத்தில் ரணிலோ, சஜித்தோ தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.குறைந்தது இந்தியாவின் உதவியுடன் கொண்டுவரப்பட்ட 13வது திருத்ததினை கூட நிறைவேற்றமுடியாத நிலையில் இவர்களினால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வினை வழங்கமுடியும்.தமிழ் பொதுவேட்பாளர் மூலம் எமது பிரச்சினைக்கான தீர்வினை வழங்க முடியாவிட்டாலும் தமிழர்களுக்குள்ள பிரச்சினைகளை சர்வதேசத்தின் முன்கொண்டு செல்லமுடிவதுடன் இந்த நாட்டில் உள்ள ஏனைய மக்களுக்கும் தமிழ் மக்களின் பிரச்சினையையும் அவர்களின் கோரிக்கையினையும் தெளிவாக வெளிப்படுத்தமுடியும் எனவும் தெரிவித்தார்.தமிழர்களுக்கு இன்றுள்ள ஒரே தெரிவு தமிழ் பொதுவேட்பாளர் அதில் மாற்றுக்கருத்துகளை கொண்டிராமல் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றினையவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement