• Jul 14 2025

'இன்று முதல் எனக்கு விடுதலை' விவாகரத்தை 40 லிட்டர் பாலில் குளித்து கொண்டாடிய கணவன்

Chithra / Jul 14th 2025, 8:06 am
image


அஸ்ஸாம் மாநிலத்தில் ஒருவர் தனது மனைவியிடமிருந்து சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றதை, 40 லிட்டர் பாலில் குளித்துக் கொண்டாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. 

நல்பாரி மாவட்டத்தில் முகல்முவா என்ற கிராமத்தில் வசித்து வரும் மாணிக் அலி என்ற 32 வயதுடைய நபரே இவ்வாரது தனது விவாகரத்தை கொண்டாடியுள்ளார். 

மாணிக் அலி தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறுவதற்குத் தயாராக இருந்தார்.

இந்த நிலையில்தான், தனது மனைவியிடமிருந்து தனக்கு விவாகரத்து கிடைத்த செய்தியை தன் வழக்கறிஞர் மூலம் அறிந்திருக்கிறார்.

மாணிக் அலி அந்தச் சந்தோஷத்தில் 40 லிட்டர் பாலில் குளித்து விவகாரத்தைக் கொண்டாடியிருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 


அந்த வீடியோவில், "இன்று முதல் நான் விடுதலையடைந்துவிட்டேன்.

மனைவி தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியபோதும் குடும்பத்தின் அமைதிக்காக நான் மௌனமாக இருந்தேன்.

நேற்றுதான் என் வழக்கறிஞர், விவாகரத்து முடிவாகிவிட்டதாக என்னிடம் தெரிவித்தார்.

எனவேதான், என்னுடைய சுதந்திரத்தைக் கொண்டாட பாலில் குளிக்கிறேன்" என மாணிக் அலி பேசியுள்ளார்.

'இன்று முதல் எனக்கு விடுதலை' விவாகரத்தை 40 லிட்டர் பாலில் குளித்து கொண்டாடிய கணவன் அஸ்ஸாம் மாநிலத்தில் ஒருவர் தனது மனைவியிடமிருந்து சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றதை, 40 லிட்டர் பாலில் குளித்துக் கொண்டாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. நல்பாரி மாவட்டத்தில் முகல்முவா என்ற கிராமத்தில் வசித்து வரும் மாணிக் அலி என்ற 32 வயதுடைய நபரே இவ்வாரது தனது விவாகரத்தை கொண்டாடியுள்ளார். மாணிக் அலி தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறுவதற்குத் தயாராக இருந்தார்.இந்த நிலையில்தான், தனது மனைவியிடமிருந்து தனக்கு விவாகரத்து கிடைத்த செய்தியை தன் வழக்கறிஞர் மூலம் அறிந்திருக்கிறார்.மாணிக் அலி அந்தச் சந்தோஷத்தில் 40 லிட்டர் பாலில் குளித்து விவகாரத்தைக் கொண்டாடியிருக்கிறார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், "இன்று முதல் நான் விடுதலையடைந்துவிட்டேன்.மனைவி தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியபோதும் குடும்பத்தின் அமைதிக்காக நான் மௌனமாக இருந்தேன்.நேற்றுதான் என் வழக்கறிஞர், விவாகரத்து முடிவாகிவிட்டதாக என்னிடம் தெரிவித்தார்.எனவேதான், என்னுடைய சுதந்திரத்தைக் கொண்டாட பாலில் குளிக்கிறேன்" என மாணிக் அலி பேசியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement