ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் நாட்டின் புலனாய்வு அமைப்புக்கள் இருப்பது தெரியவந்துள்ளது என சமூக மற்றும் மத மையத்தின் இயக்குநர் பாதிரியார் ரோஹன் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனும், அவரது முன்னாள் ஊடக செய்தித் தொடர்பாளர் அசாத் மௌலானாவும், ஈஸ்டர் தாக்குதல்களில் தொடர்புடைய நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் புலனாய்வுத்துறையினர் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கின்றார்கள், தாக்குதல்களை மேற்கொண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார்கள் என்பது விசாரணை அறிக்கைகள் ஊடாக எமக்குத் தெரியவந்துள்ளது.
தாக்குதலின் பின்னணியிலிருந்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை அடையாளம் காண முடியாதளவிலேயே நாட்டின் பாதுகாப்புத்துறை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் புலனாய்வு அமைப்புக்கள். வெளியான தகவல் ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் நாட்டின் புலனாய்வு அமைப்புக்கள் இருப்பது தெரியவந்துள்ளது என சமூக மற்றும் மத மையத்தின் இயக்குநர் பாதிரியார் ரோஹன் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அதேவேளை, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனும், அவரது முன்னாள் ஊடக செய்தித் தொடர்பாளர் அசாத் மௌலானாவும், ஈஸ்டர் தாக்குதல்களில் தொடர்புடைய நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் புலனாய்வுத்துறையினர் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கின்றார்கள், தாக்குதல்களை மேற்கொண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார்கள் என்பது விசாரணை அறிக்கைகள் ஊடாக எமக்குத் தெரியவந்துள்ளது. தாக்குதலின் பின்னணியிலிருந்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை அடையாளம் காண முடியாதளவிலேயே நாட்டின் பாதுகாப்புத்துறை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.