• May 14 2025

அரசியலமைப்புப் பேரவைக்கு புதிய செயலாளர் நியமிக்க தீவிர நடவடிக்கை

Chithra / May 13th 2025, 9:25 am
image


அரசியலமைப்புப் பேரவைக்கு புதிய செயலாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.

கடந்த 2023ஆம் ஆண்டு தொடக்கம் அரசியலமைப்புப் பேரவையின் செயலாளராக இருந்த, நாடாளுமன்ற முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் தன் பதவியில் இருந்து  விலகியுள்ளார்.

அரசியலமைப்புப் ​பேரவைக்கு அவர் சமர்ப்பித்த  பதவி விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அந்தப் பதவிக்குப் பொருத்தமான புதியவர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் தற்போதைக்கு தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது.

அரசாங்கத்துக்கு நெருக்கமான ஒருவரை அந்தப் பதவிக்கு நியமித்துக் கொள்ள முடியாத பட்சத்தில், பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாக பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புப் பேரவைக்கு புதிய செயலாளர் நியமிக்க தீவிர நடவடிக்கை அரசியலமைப்புப் பேரவைக்கு புதிய செயலாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.கடந்த 2023ஆம் ஆண்டு தொடக்கம் அரசியலமைப்புப் பேரவையின் செயலாளராக இருந்த, நாடாளுமன்ற முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் தன் பதவியில் இருந்து  விலகியுள்ளார்.அரசியலமைப்புப் ​பேரவைக்கு அவர் சமர்ப்பித்த  பதவி விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.இதனடிப்படையில் அந்தப் பதவிக்குப் பொருத்தமான புதியவர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் தற்போதைக்கு தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது.அரசாங்கத்துக்கு நெருக்கமான ஒருவரை அந்தப் பதவிக்கு நியமித்துக் கொள்ள முடியாத பட்சத்தில், பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாக பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement