• Jan 11 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலுக்கு இடைக்கால தடை உத்தரவு

Chithra / Dec 12th 2024, 12:27 pm
image


ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதி செய்யப்படுவதை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்  தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தேசியப்பட்டியல் வழங்குவது தொடர்பான தங்களது கட்சியுடனான உடன்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்றவேண்டுமெனவும், அதுவரை இடைக்காலத் தடையை விதிக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸ் தனது மனுவில் கேட்டுள்ளது.

அதன்படி  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயர் இல்லாமல் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கான பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதை தடுத்தே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதி செய்யப்படுவதை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்  தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.தேசியப்பட்டியல் வழங்குவது தொடர்பான தங்களது கட்சியுடனான உடன்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்றவேண்டுமெனவும், அதுவரை இடைக்காலத் தடையை விதிக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸ் தனது மனுவில் கேட்டுள்ளது.அதன்படி  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயர் இல்லாமல் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கான பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதை தடுத்தே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement