• Nov 24 2024

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு சர்வதேச வங்கிக் கணக்கு!

Chithra / Aug 28th 2024, 2:59 pm
image


பஹ்ரைனின் தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையம்   தொழில் நிமித்தமாக பஹ்ரைன் விமான நிலையங்களுக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் சர்வதேச வங்கிக் கணக்கை  வழங்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இதன்படி குறித்த திட்டம் இம்மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சரியான பணப் பரிவர்த்தனைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பஹ்ரைனின் தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (LMRA) www.lmra.gov.bh என்ற இணையதளத்திற்குச் சென்று 00973-17506055 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் இது தொடர்பிலான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், வெளிநாட்டுப் பணியாளர்கள் பஹ்ரைனுக்குள் நுழையும் போது, விமான நிலையத்தில் வைத்து இந்த சர்வதேச வங்கிக் கணக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் ஆலோசனைகளையும் அந்நாட்டு அரசாங்கம் வழங்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு சர்வதேச வங்கிக் கணக்கு பஹ்ரைனின் தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையம்   தொழில் நிமித்தமாக பஹ்ரைன் விமான நிலையங்களுக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் சர்வதேச வங்கிக் கணக்கை  வழங்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.இதன்படி குறித்த திட்டம் இம்மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான பணப் பரிவர்த்தனைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் பஹ்ரைனின் தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (LMRA) www.lmra.gov.bh என்ற இணையதளத்திற்குச் சென்று 00973-17506055 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் இது தொடர்பிலான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.மேலும், வெளிநாட்டுப் பணியாளர்கள் பஹ்ரைனுக்குள் நுழையும் போது, விமான நிலையத்தில் வைத்து இந்த சர்வதேச வங்கிக் கணக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் ஆலோசனைகளையும் அந்நாட்டு அரசாங்கம் வழங்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement