• Mar 31 2025

இராணுவ அதிகாரிகளை விசாரியுங்கள்!- தாம் இறப்பதற்கு முன்னர் நீதியை தருமாறு, சர்வதேசத்திடம் கோரும் - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

Tharmini / Dec 10th 2024, 2:02 pm
image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (10) வடக்கு கிழக்கில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

அத்துடன் சர்வதேச நீதிக்கான அவசர கோரிக்கையாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளனர். 

அவர்களது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் , இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்.

வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்டன.

அவர்களுக்குரிய நீதியை கேட்டு போராடி வரும் எங்களுக்கும் எமது பிள்ளைகளின் தற்போதைய நிலையறியும் உரிமையும் அதைக்கேட்டுப் போராடும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. 

தடையுத்தரவு, பயங்கரவாதத்தடுப்பு பிரிவினரின் விசாரணை, வழக்குத்தாக்கல் செய்தல் என்ற தடைகள் மூலமாக வயோதிபத் தாய்மார்களாகிய எங்களை போராட்டத்திலிருந்து அகற்ற முயற்சிக்கப்படுகிறது. 

இலங்கையில் 75 ஆண்டுகளாக தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாக நடாத்தப்பட்டு வந்திருக்கிறார்கள்.

கல்வி, பல்கலைக்கழக அனுமதி, தொழில் வாய்ப்பு, மொழி, பண்பாட்டிற்கான உரிமை என்பவற்றில் காட்டப்பட்ட பாரபட்சம், புறக்கணிப்பு என்பவற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தார்கள்.

அதன் நியாயத்தன்மையை உணர்ந்த தமிழ் அரசியல் தரப்பினரும், பொதுமக்களும் தமது ஆதரவைக் கொடுத்து அவர்களை ஊக்குவித்தார்கள். 

மக்களது ஆதரவு இன்றி போராட்டம் இந்தளவு வளர்ந்திருக்க முடியாது என்ற உண்மை போராட்டத்தில் இணைந்திருந்த தரப்புக்கு நன்கு புரியும்.

உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி சர்வதேசத்தின் உதவியுடன் 2009 மே மாதத்தில் மௌனிக்கச் செய்யப்பட்டது.

அதற்கு பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களின் உயிர்கள் பலியாக்கப்பட்டன. 

சுமார் 20,000 மக்கள் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனர்களாக்கப்பட்டனர்.

அரச பயங்கரவாதம் இந்தளவையும் செய்துவிட்டு “கிரிபத்” கொடுத்து தமது வெற்றியைக் கொண்டாடியது.

ஆனால் சிங்கள அரசையும் அதன்வாக்குறுதியையும் வேறுவழியின்றி நம்பி சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் அரசியல் கைதிகளாக சிறையிலும், அடிமைகளாக இரகசிய வதை முகாம்களிலும் வாடுகின்றார்கள். 

இவர்களிற்கான நீதிக்காக 2,850 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாம் மன அழுத்தத்திற்குள்ளாகி இறந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் தமக்கு வாக்களித்தவர்களைத் திருப்திப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.

எம்மையும், சர்வதேசத்தையும் ஏமாற்றி கால இழுத்தடிப்புகளை மேற்கோண்டு தமது பதவிக்காலத்தை காப்பாற்றிக் கொள்கின்றனர். 

நாம் தற்போது சுதாகரித்துக் கொண்டுள்ளோம்.

ஆனால் சர்வதேசத்திற்கு அரசின் கபடத்தனம் புரியவில்லை.

தற்போது “மாற்றம்” என்ற கோஷத்துடன் புதியவர்கள் ஆட்சியமைத்துள்ளனர்.

அவர்களும் போராட்ட வழியில் வந்தவர்கள் என்ற பரிந்துரையை சில நாட்டின் பிரதிநிதிகள் எம்மிடம் தெரிவிக்கின்றார்கள்.

அவர்களுக்கும் அதே கருத்துடைய அனைவருக்கும் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகின்றோம். 

15 வருடங்களாக பல்வேறுபட்ட பெயர்களில் கொண்டுவரப்பட்ட பொறிமுறைகளில் எம் ஈடுபாடு, அங்கு காட்டப்பட்ட உண்மைத்தன்மையின்மை, உதாசீனங்கள் என்பன எமக்கு பலத்த ஏமாற்றத்தையும் விரக்தியையும் தந்ததால் நாம் உள்ளகப் பொறிமுறைகளை நிராகரித்து சர்வதேசப் பொறிமுறையை மட்டும் கோரி நிற்கின்றோம்.

எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு புதிய அரசாங்கத்தை நம்பி எம்மை அணுகுபவர்களுக்கே உண்டு. 

பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற உண்மைத்தனத்துடனும், எம்மை அக்கறையுடனும் அணுகுவதாயின் எமக்கு நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்காக பின்வரும் விடயங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். 

1. எமது உறவுகள் சரணடைந்த, கையளிக்கப்பட்ட , கைது செய்யப்பட்ட ,முக்கியமான நான்கு காவலரண்களுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு உண்மை அறியப்பட வேண்டும் , அவர்கள் அனைவரும் உயிருடனும், நல்ல பதவிகளிலும் தற்போதும் உள்ளார்கள். அதுவே காலம்காலமாக ஏமாற்றம்பட்டு வந்த எமக்கு நல்லெண்ண சமிக்ஞையாக இருக்கும். 

2. எம்மால் செயலற்றது என்று நிரூபிக்கப்பட்ட ஓ.எம்.பி அலுவலகம் கலைக்கப்படவேண்டும். 

ஆணையாளர் அவர்களே! 

உள்நாட்டு பொறிமுறைகளிலும், சிறிலங்கா அரசிலும் நம்பிக்கை இழந்த நாம் சர்வதேச பொறிமுறையை கோரி 2,850 நாட்களாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். சர்வதேசப் பொறிமுறைக்குத் தேவையான சாட்சிகள் ஐ.நா இன் ஆவணம் திரட்டும் பொறிமுறை மூலம் திரட்டப்பட்டுள்ளது. 

எனவே ஆவணத்திரட்டல் தொடரும் அதேநேரம், அதற்குச் சமாந்தரமாக சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றின் கீழும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் வயோதிபத் தாய்மாராகிய நாமும் இறப்பதற்கு முன் நீதியைப் பெற்றிட உதவுங்கள். - என்றுள்ளது .





இராணுவ அதிகாரிகளை விசாரியுங்கள்- தாம் இறப்பதற்கு முன்னர் நீதியை தருமாறு, சர்வதேசத்திடம் கோரும் - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (10) வடக்கு கிழக்கில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்அத்துடன் சர்வதேச நீதிக்கான அவசர கோரிக்கையாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளனர். அவர்களது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் , இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்.வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்டன. அவர்களுக்குரிய நீதியை கேட்டு போராடி வரும் எங்களுக்கும் எமது பிள்ளைகளின் தற்போதைய நிலையறியும் உரிமையும் அதைக்கேட்டுப் போராடும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. தடையுத்தரவு, பயங்கரவாதத்தடுப்பு பிரிவினரின் விசாரணை, வழக்குத்தாக்கல் செய்தல் என்ற தடைகள் மூலமாக வயோதிபத் தாய்மார்களாகிய எங்களை போராட்டத்திலிருந்து அகற்ற முயற்சிக்கப்படுகிறது. இலங்கையில் 75 ஆண்டுகளாக தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாக நடாத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். கல்வி, பல்கலைக்கழக அனுமதி, தொழில் வாய்ப்பு, மொழி, பண்பாட்டிற்கான உரிமை என்பவற்றில் காட்டப்பட்ட பாரபட்சம், புறக்கணிப்பு என்பவற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அதன் நியாயத்தன்மையை உணர்ந்த தமிழ் அரசியல் தரப்பினரும், பொதுமக்களும் தமது ஆதரவைக் கொடுத்து அவர்களை ஊக்குவித்தார்கள். மக்களது ஆதரவு இன்றி போராட்டம் இந்தளவு வளர்ந்திருக்க முடியாது என்ற உண்மை போராட்டத்தில் இணைந்திருந்த தரப்புக்கு நன்கு புரியும். உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி சர்வதேசத்தின் உதவியுடன் 2009 மே மாதத்தில் மௌனிக்கச் செய்யப்பட்டது. அதற்கு பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களின் உயிர்கள் பலியாக்கப்பட்டன. சுமார் 20,000 மக்கள் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனர்களாக்கப்பட்டனர். அரச பயங்கரவாதம் இந்தளவையும் செய்துவிட்டு “கிரிபத்” கொடுத்து தமது வெற்றியைக் கொண்டாடியது. ஆனால் சிங்கள அரசையும் அதன்வாக்குறுதியையும் வேறுவழியின்றி நம்பி சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் அரசியல் கைதிகளாக சிறையிலும், அடிமைகளாக இரகசிய வதை முகாம்களிலும் வாடுகின்றார்கள். இவர்களிற்கான நீதிக்காக 2,850 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாம் மன அழுத்தத்திற்குள்ளாகி இறந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் தமக்கு வாக்களித்தவர்களைத் திருப்திப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். எம்மையும், சர்வதேசத்தையும் ஏமாற்றி கால இழுத்தடிப்புகளை மேற்கோண்டு தமது பதவிக்காலத்தை காப்பாற்றிக் கொள்கின்றனர். நாம் தற்போது சுதாகரித்துக் கொண்டுள்ளோம். ஆனால் சர்வதேசத்திற்கு அரசின் கபடத்தனம் புரியவில்லை. தற்போது “மாற்றம்” என்ற கோஷத்துடன் புதியவர்கள் ஆட்சியமைத்துள்ளனர். அவர்களும் போராட்ட வழியில் வந்தவர்கள் என்ற பரிந்துரையை சில நாட்டின் பிரதிநிதிகள் எம்மிடம் தெரிவிக்கின்றார்கள். அவர்களுக்கும் அதே கருத்துடைய அனைவருக்கும் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகின்றோம். 15 வருடங்களாக பல்வேறுபட்ட பெயர்களில் கொண்டுவரப்பட்ட பொறிமுறைகளில் எம் ஈடுபாடு, அங்கு காட்டப்பட்ட உண்மைத்தன்மையின்மை, உதாசீனங்கள் என்பன எமக்கு பலத்த ஏமாற்றத்தையும் விரக்தியையும் தந்ததால் நாம் உள்ளகப் பொறிமுறைகளை நிராகரித்து சர்வதேசப் பொறிமுறையை மட்டும் கோரி நிற்கின்றோம். எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு புதிய அரசாங்கத்தை நம்பி எம்மை அணுகுபவர்களுக்கே உண்டு. பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற உண்மைத்தனத்துடனும், எம்மை அக்கறையுடனும் அணுகுவதாயின் எமக்கு நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்காக பின்வரும் விடயங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். 1. எமது உறவுகள் சரணடைந்த, கையளிக்கப்பட்ட , கைது செய்யப்பட்ட ,முக்கியமான நான்கு காவலரண்களுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு உண்மை அறியப்பட வேண்டும் , அவர்கள் அனைவரும் உயிருடனும், நல்ல பதவிகளிலும் தற்போதும் உள்ளார்கள். அதுவே காலம்காலமாக ஏமாற்றம்பட்டு வந்த எமக்கு நல்லெண்ண சமிக்ஞையாக இருக்கும். 2. எம்மால் செயலற்றது என்று நிரூபிக்கப்பட்ட ஓ.எம்.பி அலுவலகம் கலைக்கப்படவேண்டும். ஆணையாளர் அவர்களே உள்நாட்டு பொறிமுறைகளிலும், சிறிலங்கா அரசிலும் நம்பிக்கை இழந்த நாம் சர்வதேச பொறிமுறையை கோரி 2,850 நாட்களாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். சர்வதேசப் பொறிமுறைக்குத் தேவையான சாட்சிகள் ஐ.நா இன் ஆவணம் திரட்டும் பொறிமுறை மூலம் திரட்டப்பட்டுள்ளது. எனவே ஆவணத்திரட்டல் தொடரும் அதேநேரம், அதற்குச் சமாந்தரமாக சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றின் கீழும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் வயோதிபத் தாய்மாராகிய நாமும் இறப்பதற்கு முன் நீதியைப் பெற்றிட உதவுங்கள். - என்றுள்ளது .

Advertisement

Advertisement

Advertisement