• Dec 16 2024

போதையில் கைகலப்பு; குடும்பஸ்தர் அடித்து கொலை! முல்லைத்தீவில் பயங்கரம்

Chithra / Dec 16th 2024, 8:19 am
image


முல்லைத்தீவு - கொக்கிளாய், கர்நாட்டுகேணிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர், நேற்றையதினம் இரவு  அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

கண்டி, நுவரெலியா பகுதியில் இருந்து தொழில் நிமித்தம் வந்த இருவர்,  கொக்குளாய் கர்நாட்டுகேணிப்பகுதியில் வாடியில் தங்கியிருந்துள்ளனர்.

நேற்றையதினம் இரவு, குறித்த இருவரும் போதையில் இருந்த நிலையில் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. 

இந்நிலையில் நுவரெலியா பிரதேசத்தில் வசிக்கும் குடும்பஸ்தர் கண்டியில் வசிக்கும் மற்றைய நபரை அடித்து கொலை செய்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில், கொக்குளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மரணமடைந்த நபரை பிரேத பரிசோதனைக்காக  வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

குறித்த சம்பவத்தில்  சுந்தரராஜ் எனும் 38 வயதுடைய கண்டியைச் சேர்ந்த நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நுவரெலியா மஸ்கெலிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய மற்றைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

போதையில் கைகலப்பு; குடும்பஸ்தர் அடித்து கொலை முல்லைத்தீவில் பயங்கரம் முல்லைத்தீவு - கொக்கிளாய், கர்நாட்டுகேணிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர், நேற்றையதினம் இரவு  அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்கண்டி, நுவரெலியா பகுதியில் இருந்து தொழில் நிமித்தம் வந்த இருவர்,  கொக்குளாய் கர்நாட்டுகேணிப்பகுதியில் வாடியில் தங்கியிருந்துள்ளனர்.நேற்றையதினம் இரவு, குறித்த இருவரும் போதையில் இருந்த நிலையில் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில் நுவரெலியா பிரதேசத்தில் வசிக்கும் குடும்பஸ்தர் கண்டியில் வசிக்கும் மற்றைய நபரை அடித்து கொலை செய்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில், கொக்குளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மரணமடைந்த நபரை பிரேத பரிசோதனைக்காக  வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.குறித்த சம்பவத்தில்  சுந்தரராஜ் எனும் 38 வயதுடைய கண்டியைச் சேர்ந்த நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நுவரெலியா மஸ்கெலிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய மற்றைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement