• Dec 12 2024

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து விசாரணை; ஜனாதிபதிக்கு மகஜர்..!

Sharmi / Dec 12th 2024, 9:22 am
image

கடந்த காலங்களில், ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து, விசாரணை செய்வதற்கு, விசேட ஆணைக்குழுவை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, திருகோணமலை மாவட்ட கங்கத்தலாக ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளது.

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவிடம் நேற்றையதினம்(11)  திருகோணமலையில் வைத்து, இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.

பத்திரிகையாளர்களின் கொலை, ஊடகவியலாளர்கள் காணாமல் போனமை, கடத்தல் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஆகியவற்றை விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவை நியமித்து, குற்றவாளிகள் இனங்காணப்பட வேண்டும் எனவும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு, அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த சில தசாப்தங்களாக, பல்வேறு அரசாங்கங்களின் கீழ், பல ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். அத்தோடு மேலும் சிலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் மேலும் சிலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்காக, அந்தந்த காலப்பகுதியில், ஊடக சங்கங்கள் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுடன், அதற்காக எடுக்கப்பட்ட, பாரபட்சமற்ற விசாரணைக்கான கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது என மேலும் அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட கங்கத்தலாக ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் அமதுரு ஜீவானந்தா, அமைப்பாளர் ஒலுமுதீன் கியாஸ் ஷாபி பொருளாளர் கீத பொன்கலன் மற்றும் உதவிச் செயலாளர் எம். எச். எம். யூசுப் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 






கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து விசாரணை; ஜனாதிபதிக்கு மகஜர். கடந்த காலங்களில், ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து, விசாரணை செய்வதற்கு, விசேட ஆணைக்குழுவை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, திருகோணமலை மாவட்ட கங்கத்தலாக ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளது.வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவிடம் நேற்றையதினம்(11)  திருகோணமலையில் வைத்து, இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.பத்திரிகையாளர்களின் கொலை, ஊடகவியலாளர்கள் காணாமல் போனமை, கடத்தல் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஆகியவற்றை விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவை நியமித்து, குற்றவாளிகள் இனங்காணப்பட வேண்டும் எனவும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு, அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில தசாப்தங்களாக, பல்வேறு அரசாங்கங்களின் கீழ், பல ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். அத்தோடு மேலும் சிலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் மேலும் சிலர் கொல்லப்பட்டுள்ளனர்.இதற்காக, அந்தந்த காலப்பகுதியில், ஊடக சங்கங்கள் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுடன், அதற்காக எடுக்கப்பட்ட, பாரபட்சமற்ற விசாரணைக்கான கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது என மேலும் அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை மாவட்ட கங்கத்தலாக ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் அமதுரு ஜீவானந்தா, அமைப்பாளர் ஒலுமுதீன் கியாஸ் ஷாபி பொருளாளர் கீத பொன்கலன் மற்றும் உதவிச் செயலாளர் எம். எச். எம். யூசுப் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement