• Apr 03 2025

தரமற்ற புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பில் விசாரணை..!!

Tamil nila / Mar 14th 2024, 9:47 pm
image

தரமற்ற புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் நாட்டிலுள்ள வைத்தியசாலை கட்டமைப்பிற்குள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம இன்று (14) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சார்பில் ஏற்கனவே சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தில் பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாதென மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று தெரிவித்தார்.

மேலும் சந்தேகநபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டார்.

தரமற்ற புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பில் விசாரணை. தரமற்ற புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் நாட்டிலுள்ள வைத்தியசாலை கட்டமைப்பிற்குள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம இன்று (14) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சார்பில் ஏற்கனவே சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தில் பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாதென மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று தெரிவித்தார்.மேலும் சந்தேகநபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement