• Nov 23 2024

நாளை வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு ..!!

Tamil nila / Mar 14th 2024, 9:32 pm
image

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் நாளை (15)  வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் இதனால் மக்களை அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொணராகலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் இதனால் அவதானம் செயல்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் , தொழிலுக்காக செல்வோர் போதுமான அளவு தண்ணீரை அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் வீடுகளில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளுமாறும், குழந்தைகளை தனியாக வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாளை வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு . நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் நாளை (15)  வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் இதனால் மக்களை அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொணராகலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் இதனால் அவதானம் செயல்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.அத்துடன் , தொழிலுக்காக செல்வோர் போதுமான அளவு தண்ணீரை அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.மேலும் வீடுகளில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளுமாறும், குழந்தைகளை தனியாக வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement