• Apr 20 2025

சவூதி அரேபியாவுக்கு ஈரான் கொடுத்த சலுகை: கடும் சிக்கலில் ட்ரம்ப்..!

Sharmi / Apr 19th 2025, 12:16 pm
image

அணு ஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்று ஈரான் தங்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானை மிரட்டி வருகின்ற நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ள சவூதி அரேபியாவின் இளவரசர் காலித் பின் சல்மான் திடீரென்று ஈரான் சென்று அந்த நாட்டின் ஆயுதப்படை தலைமை தளபதி மேஜர் ஜெனரல் முகமது பகேரியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

இந்த வேளையில் சவூதி அரேபியாவுக்கு ஈரான் முக்கிய ஆஃபரை கொடுத்துள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரும் பிரச்சனையாக மாறலாம்.

அதாவது சவூதி அரேபியாவின் இளவரசர் காலித் பின் சல்மான் உடனான சந்திப்பின்போது ஈரான் ஆயுதப்படையின் தலைமை தளதி மேஜர் ஜெனரல் முகமது பகேரி, சவூதி அரேபியாவுடன் ராணுவ உறவுகளை விரிவுப்படுத்த விரும்புவதாக கூறினார். 

இருநாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளை மீட்டெடுப்பதற்கு ‛பெய்ஜிங் ஒப்பந்தம் கடந்த 2023 மார்ச்சில் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக ராணுவ உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக ஈரான் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு சவூதி அரேபியாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்மூலம் ஈரான் - சவூதி அரேபியா ஆகிய நாடுகள் வரும் ஆண்டுகளில் ஒன்றாக இணைந்து செயல்படும் வாய்ப்பு ஏற்படலாம்.

இது நடக்கும் பட்சத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



சவூதி அரேபியாவுக்கு ஈரான் கொடுத்த சலுகை: கடும் சிக்கலில் ட்ரம்ப். அணு ஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்று ஈரான் தங்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானை மிரட்டி வருகின்ற நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ள சவூதி அரேபியாவின் இளவரசர் காலித் பின் சல்மான் திடீரென்று ஈரான் சென்று அந்த நாட்டின் ஆயுதப்படை தலைமை தளபதி மேஜர் ஜெனரல் முகமது பகேரியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த வேளையில் சவூதி அரேபியாவுக்கு ஈரான் முக்கிய ஆஃபரை கொடுத்துள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரும் பிரச்சனையாக மாறலாம்.அதாவது சவூதி அரேபியாவின் இளவரசர் காலித் பின் சல்மான் உடனான சந்திப்பின்போது ஈரான் ஆயுதப்படையின் தலைமை தளதி மேஜர் ஜெனரல் முகமது பகேரி, சவூதி அரேபியாவுடன் ராணுவ உறவுகளை விரிவுப்படுத்த விரும்புவதாக கூறினார். இருநாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளை மீட்டெடுப்பதற்கு ‛பெய்ஜிங் ஒப்பந்தம் கடந்த 2023 மார்ச்சில் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக ராணுவ உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக ஈரான் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு சவூதி அரேபியாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஈரான் - சவூதி அரேபியா ஆகிய நாடுகள் வரும் ஆண்டுகளில் ஒன்றாக இணைந்து செயல்படும் வாய்ப்பு ஏற்படலாம்.இது நடக்கும் பட்சத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement