• Nov 28 2024

ஈரானின் புதிய அதிபரானார் மசூத் பெசஸ்கியான்!

Anaath / Jul 31st 2024, 11:33 am
image

ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரசி  கடந்த மே 17 ஆம் தேதி அஜர்பைஜான் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தத்தனை தொடர்ந்து அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஈரானில் கடந்த ஜூன் 28 நடந்தது.

இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜூலை 5 ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் சீர்திருத்தக் கட்சி வேட்பாளர் மசூத் பெசஸ்கியான் 54 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அதனை தொடர்ந்து நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் ஈரான் அதிபராக மசூத் பெசஸ்கியான் பதவியேற்றுள்ளார்.

இந்த பதவியேற்பு விழாவில்  'புனித குரான் மற்றும் ஈரான் பிரஜைகளின் முன்னிலையில், இஸ்லாமிய குடியரசுக்கும், நாட்டின் அரசியலமைப்புக்கும் பாதுகாவலனாக  இருப்பேன் என்று கடவுள் மீது ஆணையாக உறுதியேற்கிறேன்' என அவர்  உறுதி மொழி அளித்துள்ளார்.

ஈரானின் புதிய அதிபரானார் மசூத் பெசஸ்கியான் ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரசி  கடந்த மே 17 ஆம் தேதி அஜர்பைஜான் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தத்தனை தொடர்ந்து அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஈரானில் கடந்த ஜூன் 28 நடந்தது.இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜூலை 5 ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் சீர்திருத்தக் கட்சி வேட்பாளர் மசூத் பெசஸ்கியான் 54 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.அதனை தொடர்ந்து நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் ஈரான் அதிபராக மசூத் பெசஸ்கியான் பதவியேற்றுள்ளார்.இந்த பதவியேற்பு விழாவில்  'புனித குரான் மற்றும் ஈரான் பிரஜைகளின் முன்னிலையில், இஸ்லாமிய குடியரசுக்கும், நாட்டின் அரசியலமைப்புக்கும் பாதுகாவலனாக  இருப்பேன் என்று கடவுள் மீது ஆணையாக உறுதியேற்கிறேன்' என அவர்  உறுதி மொழி அளித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement