• Nov 23 2024

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிரிழப்பு...! ஈரான் அதிகாரிகள் அறிவிப்பு...!

Sharmi / May 20th 2024, 11:37 am
image

ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அஜர்பைஜான் எல்லையில் உள்ள அணை திறப்பு விழாவில் கலந்து கொண்டு திரும்பிய ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் நேற்றையதினம்(19) விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த ஜனாதிபதி ரைசி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்தெல்லா மற்றும் அவர்களுடன் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றையதினம் குறித்த விபத்து இடம்பெற்று 15 மணி நேரத்திற்குமேல் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணம் தப்ரிஸ் நகர் டவில் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிரிழப்பு. ஈரான் அதிகாரிகள் அறிவிப்பு. ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.அஜர்பைஜான் எல்லையில் உள்ள அணை திறப்பு விழாவில் கலந்து கொண்டு திரும்பிய ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் நேற்றையதினம்(19) விபத்துக்குள்ளானது.குறித்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த ஜனாதிபதி ரைசி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்தெல்லா மற்றும் அவர்களுடன் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்றையதினம் குறித்த விபத்து இடம்பெற்று 15 மணி நேரத்திற்குமேல் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணம் தப்ரிஸ் நகர் டவில் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement