• Nov 14 2024

மொட்டு கட்சியின் ஆதரவு இவருக்கா? – வெளியாகியுள்ள தகவல்

Tharun / Jul 28th 2024, 5:07 pm
image

இலங்கையின் ஜனாதிபதி  தேர்தலுக்காக அநேக  வேட்பாளர்கள் தற்போது களமிறங்கியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் யாருக்கு ஆதரவளிப்பது  என்பது குறித்து தகவல் கசிந்துள்ளது.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தொழிலதிபரும், பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தம்மிக்க பெரேராவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதகா ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும், ராஜபக்ஸ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஸவினால் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானம் நாளைய தினம்(29) அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப்படாது எனவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தை முறையாக நடத்தி செல்வதற்கு கட்சி என்ற விதத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என அவர் கூறுகின்றார்.

மொட்டு கட்சியின் ஆதரவு இவருக்கா – வெளியாகியுள்ள தகவல் இலங்கையின் ஜனாதிபதி  தேர்தலுக்காக அநேக  வேட்பாளர்கள் தற்போது களமிறங்கியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் யாருக்கு ஆதரவளிப்பது  என்பது குறித்து தகவல் கசிந்துள்ளது.அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தொழிலதிபரும், பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தம்மிக்க பெரேராவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதகா ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும், ராஜபக்ஸ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.கட்சியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஸவினால் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானம் நாளைய தினம்(29) அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப்படாது எனவும் குறிப்பிட்டார்.எவ்வாறாயினும், அரசாங்கத்தை முறையாக நடத்தி செல்வதற்கு கட்சி என்ற விதத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என அவர் கூறுகின்றார்.

Advertisement

Advertisement

Advertisement