எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவுள்ளதாக சிங்கள மக்கள் மத்தியில் சென்று கூறுவதற்கு அவர் தயாரா என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி யெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவுள்ளதாக சஜித் பிரேமதாச கூறிவருகின்றார்.
அவர் வாக்குறுதிகளை மட்டுமே தற்போது வழங்க முடியும். அவர் எதிர்க்கட்சி தலைவராக மட்டுமே இருக்கின்றார். அவரிடம் நிறைவேற்று அதிகாரமும் இல்லை.
பாராளுமன்றிலும் அவருக்கு பெரும்பான்மை இல்லை.
அவர் 13 ஐ அமுல்படுத்துவேன் என பல தடவைகள் கூறியுள்ளார். இவ்வாறு வாக்குறுதிகளை அனைவரும் வழங்க முடியும் ஆனால் அதனை அவர்கள் நிறைவேற்றவேண்டும்.
13 ஐ அமுல்படுத்துவேன் என சஜித் பிமேமதாச சிங்கள மக்கள் மத்தியில் சென்று கூற வேண்டும். அவர் அதற்கு சிங்கள மக்களின் ஆதரவை திரட்ட வேண்டும்.
வடக்கு கிழக்கிலே வரும்போது மட்டும் 13 ஐ அமுல்படுத்துவேன் என கூறுவது போதுமானது என நான் நம்பவில்லை.
எனவே, இது தொடர்பில் பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் தெரிவித்தார்.
13ஐ அமுல்படுத்துவேன் என சிங்கள மக்கள் மத்தியில் கூறுவதற்கு சஜித் தயாரா சாணக்கியன் எம்.பி கேள்வி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவுள்ளதாக சிங்கள மக்கள் மத்தியில் சென்று கூறுவதற்கு அவர் தயாரா என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி யெழுப்பியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,13 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவுள்ளதாக சஜித் பிரேமதாச கூறிவருகின்றார்.அவர் வாக்குறுதிகளை மட்டுமே தற்போது வழங்க முடியும். அவர் எதிர்க்கட்சி தலைவராக மட்டுமே இருக்கின்றார். அவரிடம் நிறைவேற்று அதிகாரமும் இல்லை.பாராளுமன்றிலும் அவருக்கு பெரும்பான்மை இல்லை.அவர் 13 ஐ அமுல்படுத்துவேன் என பல தடவைகள் கூறியுள்ளார். இவ்வாறு வாக்குறுதிகளை அனைவரும் வழங்க முடியும் ஆனால் அதனை அவர்கள் நிறைவேற்றவேண்டும். 13 ஐ அமுல்படுத்துவேன் என சஜித் பிமேமதாச சிங்கள மக்கள் மத்தியில் சென்று கூற வேண்டும். அவர் அதற்கு சிங்கள மக்களின் ஆதரவை திரட்ட வேண்டும்.வடக்கு கிழக்கிலே வரும்போது மட்டும் 13 ஐ அமுல்படுத்துவேன் என கூறுவது போதுமானது என நான் நம்பவில்லை.எனவே, இது தொடர்பில் பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் தெரிவித்தார்.